நிலவும் வளிமண்டல சுழற்சி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?
தமிழ்நாட்டில் இன்று பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
லட்சத் தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் 40km வேக காற்றுடன் மிதமான மழை பெய்யும்.
நாளை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் 40km வேக காற்றுடன் மிதமான மழை பெய்யும்.

அதேநேரத்தில் நாளை மறுநாள் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொருத்தவரையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதேநேரம், இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |