சுவிட்சர்லாந்தில் முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களுக்கும் கொரோனா தொற்று: உலக நாடுகள் பலவற்றில் இதே நிலைதான்
சுவிட்சர்லாந்தில் முழுமையான தடுப்பூசி பெற்ற 362 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது. இப்படி இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றபின்னரும் கொரோனா பதிப்புக்குள்ளானோர் பலர் அதை பதிவு செய்யாததால், வெளியான எண்ணிக்கையை விட உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது.
உலக நாடுகள் பலவற்றில் கொரோனா தடுப்பூசி பெற்ற பின்னரும் கொரோனா தொற்றுக்கு ஆளாவோர் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியானவண்ணம் உள்ளன.
அமெரிக்காவில் பல்கலைக்கழகம் ஒன்றில் முழுமையாக தடுப்பூசி பெற்ற ஏழு மாணவர்களுக்கு கொரோனா தொற்றியுள்ளது. சமீபத்தில் மின்னசோட்டாவில் ஒரு பெண் முழுமையாக தடுப்பூசி பெற்ற பின்னரும் கொரோனாவுக்கு ஆளாகியுள்ளார். பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கும் அவரது கால்கள் அகற்றப்பட்டுவிட்டன, கைகள் அகற்றப்பட உள்ளன. இந்நிலையில், சுவிட்சர்லாந்திலும் இந்த நிலை உருவாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் முழுமையான தடுப்பூசி பெற்ற 362 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது. அவர்களில் 86 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
அத்துடன், இந்த ஆண்டு கொரோனாவால் பலியான 1,100 பேரில், 18 பேர் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியும் செலுத்திக்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.