தமிழர்களைத் திருடர்கள் போல சித்தரிக்கும் மோடி மன்னிப்பு கேட்கணும்: சீமான்

Narendra Modi Seeman
By Sathya May 22, 2024 12:40 PM GMT
Report

தமிழர்களைத் திருடர்கள் போல சித்தரிப்பதாகவும், தேர்தல் முடிந்ததும் தனது உண்மை முகத்தைக் பிரதமர் மோடி காட்டுகிறார் என்றும் நாம் தமிழர் கட்சி சீமான் கூறியுள்ளார்.

சீமான் அறிக்கை

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரிசாவில் தேர்தல் பரப்புரை செய்த பிரதமர் நரேந்திரமோடி, பூரி ஜெகந்நாதர் கோவிலினுடைய கருவூலத் திறவுகோல் தமிழ்நாட்டிலிருப்பதாகக் குற்றஞ்சாட்டியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

எவ்வித அடிப்படை ஆதாரமுமின்றி, தனது அரசியல் தன் இலாபத்துக்காக பன்னிரண்டு கோடி தமிழ்த்தேசிய இன மக்களையும், அவர்களது வரலாற்றுத்தாயகமான தமிழ்நாட்டையும் கொச்சைப்படுத்திப் பேசியிருக்கும் இச்செயல் கடும் கண்டனத்திற்குரியது.

Modi should apologize for portraying Tamils ​​as thieves: Seeman

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, உலகிற்கு நாகரீகத்தையும், பண்பாட்டையும், வாழ்வியல் நெறிமுறைகளையும் கற்றுத் தந்த மரபார்ந்த இனம் தமிழ்ப்பேரினமாகும்.

மானத்தையும், வீரத்தையும் இரு கண்களெனப் போற்றி, அறத்தின் வழிநின்று வாழ்கிற பெருங்கூட்டத்தினர் தமிழர்கள் நாங்கள். அத்தகைய இனக்கூட்டத்தின் மீது போகிறப் போக்கில் திருட்டுப்பழியைச் சுமத்த நினைக்கும் பிரதமர் மோடியின் பேச்சு அற்பத்தனமானதாகும்.

ஈரான் அதிபர் மரணம்.., கர்நாடகா சுவாமிகளின் ஆருடம் பலித்ததா?

ஈரான் அதிபர் மரணம்.., கர்நாடகா சுவாமிகளின் ஆருடம் பலித்ததா?

தமிழ்நாட்டுக்குப் பரப்புரைக்கு வருகிறபோதெல்லாம் தமிழ்மொழியையும், தமிழர்களையும் புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி, ஒரிசாவில் தமிழர்களை இழிவாகக் காட்ட நினைக்கிறாரென்றால், எவ்வாறு இதனைச் சகித்துக் கொள்ள முடியும்?

Modi should apologize for portraying Tamils ​​as thieves: Seeman

தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்துவிட்டதெனும் துணிவில், தனது உண்மை முகத்தை வெளிக்காட்டத் தொடங்குகிறாரா பிரதமர் மோடி?

இவ்வளவு நாட்களாக இசுலாமிய மதவெறுப்பை உமிழ்ந்துப் பரப்புரை செய்தவர், இப்போது அத்தோடு சேர்த்து தமிழர் இன வெறுப்பையும் காட்டியிருப்பது மிகவும் கீழ்த்தரமானதாகும்.

ஆகவே, தமிழர்களைத் திருடர்கள் போல சித்தரிக்கும் விதமாகப் பேசிய நரேந்திரமோடி, தனது பேச்சினை உடனடியாகத் திரும்பப் பெற்று, ஒட்டுமொத்த தமிழர்களிடம் வெளிப்படையான மன்னிப்புக் கேட்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

இல்லையெனில், இதற்கான எதிர்விளைவுகளை வருங்காலத்தில் பாஜகவானது தமிழ்நாட்டில் எதிர்கொள்ள நேரிடுமென எச்சரிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

நீர்வேலி, Recklinghausen, Germany

07 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

08 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States, Gronau, Germany

07 Jun, 2024
மரண அறிவித்தல்

மண்டைதீவு, வண்ணார்பண்ணை, Walthamstow, United Kingdom

04 Jun, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு, நல்லூர், London, United Kingdom

27 May, 2024
மரண அறிவித்தல்

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, Garges-lès-Gonesse, France

02 Jun, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் வடக்கு

10 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், முரசுமோட்டை, வவுனியா

11 Jun, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Toronto, Canada

07 Jun, 2024
மரண அறிவித்தல்

மூளாய், திருகோணமலை, கொழும்பு

09 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கோப்பாய் வடக்கு, கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை, London, United Kingdom

11 Jun, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Markham, Canada

03 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 4ம் வட்டாரம், திருநெல்வேலி, Scarborough, Canada

10 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

06 Jun, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

06 Jun, 2024
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, Toronto, Canada

03 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US