டிரம்ஸ் அடித்து உற்சாகமாக கொண்டாடிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி
இந்திய மாநிலம், உத்தரகாண்டில் டிரம்ஸ் அடித்து உற்சாகமாக கொண்டாடிய இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மோடி பயணம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக உத்தரகாண்ட் மாநிலத்திற்கு இன்று சென்றார். அங்கு சென்றடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும், பித்தோராகர் செல்லும் பிரதமர், அங்கு ஊரக வளர்ச்சி, சாலை, மின்சாரம், நீர்ப்பாசனம், குடிநீர், தோட்டக்கலை, கல்வி, சுகாதாரம், பேரிடர் மேலாண்மை போன்ற துறைகளில் சுமார் ரூ.4200 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
டிரம்ஸ் அடிக்கும் மோடி
உத்தரகாண்ட் மாநிலத்தின் கைவினை பொருட்களை பிரதமர் மோடி கண்டுகளித்தார். மேலும், அவர்களின் பாரம்பரிய இசைக்கருவிகளை வாசித்து மகிழ்ந்தார்.

இதனைத்தொடர்ந்து, உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் ராணுவ வீரர்களுடன் மோடி கலந்துரையாடினார். தற்போது, உற்சாகமாக டிரம்ஸ் அடிக்கும் மோடியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Amid Drum Beats & Celebrations, PM Modi arrives to a warm reception at Parvati Kund https://t.co/bfsudoJqtu
— Dr. Sudhirkumar J. Patel (@DrSudhirPatel) October 12, 2023
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |