வாட்ஸ் அப் சேனலில் இணைந்துவிட்டார் பிரதமர் மோடி! எப்படி பின்தொடரலாம்
வாட்ஸ்அப் நிறுவனம் அப்டேட் செய்த வாட்ஸ் அப் சேனலில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இணைந்துள்ளனர். அவர்களை பின்தொடர்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
வாட்ஸ் அப் சேனல்
பயனர்களுக்கு தொடர்ந்து அப்டேட்டை வழங்கிக் கொண்டிருக்கிறது வாட்ஸ்அப் நிறுவனம். பயனாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் எதாவது ஒரு அப்டேட்டை அடிக்கடி அறிமுகப்படுத்துகிறது.
அந்தவகையில் 'Channels' என்ற புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தனி நபர் மற்றும் நிறுவனங்களில் இருந்து வரும் அதிகாரப்பூர்வ செய்திகளை இந்த Whatsapp Channels அம்சம் மூலம் தெரிந்து கொள்ளளலாம் என்று தெரிவிக்க்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப்பில் அப்டேட்ஸ் எனும் ஒரு புதிய டேப் வழங்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்கள் குடும்பம், நண்பர்கள் மற்றும் சமூகங்களுடனான சாட்களில் இருந்து தனித்தனியாக அவர்கள் பின்பற்ற விரும்பும் சேனல்கள் எனும் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சேனல் மூலம், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் வாக்கெடுப்புகளை அனுப்பலாம். பயனர்கள் தங்களது விருப்பத்தின் பேரில் மட்டுமே சேனல்களை பின்தொடர்வதற்கு ஒருவித கோப்பகத்தை (searchable directory ) வாட்ஸ்அப் வழங்குகிறது.
வாட்ஸ் அப் சேனலில் இணைந்த மோடி
சர்வதேச பிரபலங்கள் பலரும் வாட்ஸ் அப் சேனலில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் வாட்ஸ் அப் சேனலில் இணைந்துள்ளார். மோடி உட்பட பிரபலங்களை பின்தொடர விரும்புவோர் வாட்ஸ் அப் செயலியை முதலில் அப்டேட்.வேண்டும்.
பின்பு, வாட்ஸ் அப்பை திறந்ததும் அதில் இருக்கும் அப்டேட்ஸை கிளிக் செய்து, அடியில் தோன்றும் Find channel என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது, பிரபலங்கள் மற்றும் விஐபிக்களின் பட்டியல்கள் காணப்படும்.
இதில், உங்களுக்கு விருப்பமான நபர்களை நீங்கள் பின்தொடரலாம். அல்லது வழக்கமான தேடல் வசதியையும் இதில் பயன்படுத்தலாம்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |