இந்திய பிரதமருக்கு இலங்கையின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு - திருக்குறள் சொல்லி நன்றி கூறிய மோடி

Anura Kumara Dissanayaka Sri Lanka Narendra Modi
By Karthikraja Apr 05, 2025 10:29 AM GMT
Report

3 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடியை, நேற்று இரவு விமான நிலையத்தில் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத் தலைமையில் 6 அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மோடியின் இலங்கை பயணம்

இந்த பயணத்தின் போது, இரு நாடுகளுக்கிடையே பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி, டிஜிட்டல் உள்கட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. 

modi srilanka

இன்று காலை தலைநகர் கொழும்புவில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் இந்திய பிரதமர் மோடிக்கு முப்படைகளின் வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கைக்கு வருகை தரும் ஒரு தலைவருக்கு முப்படை வரவேற்பு அளிப்பது இதுவே முதல் முறையாகும்.

modi srilanka

இதன் பின்னர், இந்தியாவின் உதவியுடன் அமைக்கப்படும் சில திட்டங்களை, பிரதமர் மோடி காணொளி வாயிலாக துவக்கி வைத்தார்.

மித்ர விபூஷணா விருது

இதனையடுத்து, இந்தியா – இலங்கை உறவுகளை வலுப்படுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையின் உயரிய விருதான மித்ர விபூஷணா(mitra vibhushana) விருதை வழங்கி இலங்கை அதிபர் அநுர குமார திஸநாயக்க கெளரவித்துள்ளார். 

modi mitra vibhushana - மித்ர விபூஷணா

விருதினைப் பெற்றுக் கொண்ட பிரதமர், "செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல வினைக்கரிய யாவுள காப்பு" எனும் நட்பின் பெருமையை உணர்த்தும் திருக்குறளை சொல்லி தனது நன்றியை தெரிவித்தார்.

"இந்த உயரிய கௌரவம் எனக்கே மட்டும் உரித்தான ஒன்றல்ல, இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களுக்கும் கிடைக்கப்பெற்ற உயர் மரியாதையாகும்.

அத்துடன் இந்திய - இலங்கை மக்களிடையிலான வரலாற்று ரீதியான உறவுகள் மற்றும் ஆழ வேரூன்றிக் காணப்படும் நட்புறவை இது குறித்து நிற்கின்றது" என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

மோடியின் இலங்கை பயணம் - கையெழுத்தாகும் முக்கிய ஒப்பந்தங்கள் என்ன?

மோடியின் இலங்கை பயணம் - கையெழுத்தாகும் முக்கிய ஒப்பந்தங்கள் என்ன?

இந்த விருது, வெளிநாட்டு சார்பில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 22வது சர்வதேச விருதாகும்.     

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
நன்றி நவிலல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US