தமிழகம் TO இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்கி வைத்தார் இந்திய பிரதமர் மோடி
தமிழக மாவட்டம், நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து, இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
சிரியா பாணி
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து, இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்து, அதற்காக ரூ.3 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தது. பின்பு, தமிழ்நாட்டிலுள்ள நாகப்பட்டினம் துறைமுகத்தை ஆழப்படுத்தி, நவீனப்படுத்தும் முயற்சி நடைபெற்றது.
இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தின் மூலம் கொச்சியில் கப்பல் கட்டும் பணி நடைபெற்று, முடிவடைந்து ‘சிரியா பாணி’ என பெயரிடப்பட்டது. இது, 150 பயணிகள் பயணிக்கும் வகையில் குளிர்சாதன வசதியுடன் வடிவமைக்கப்பட்டது.
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் 60 நாட்டிக்கல் மைல் தூரத்தில் இருப்பதால் 3.30 மணி நேரத்தில் இலங்கை செல்லலாம். இதற்கான பயண கட்டணம் நபர் ஒருவருக்கு ரூ. 6500 மற்றும் 18 % ஜிஎஸ்டி வரியோடு ரூ.7670 நிர்ணயிக்கப்பட்டுள நிலையில், துவக்க விழாவை முன்னிட்டு 75% சலுகை விலை அறிவிக்கப்பட்டது.
தொடங்கி வைத்தார் மோடி
இந்நிலையில், நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து, இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு, இரண்டு முறை தள்ளி போனது.
பின்னர், கப்பல் போக்குவரத்து அக்டோபர் 14 -ம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம், தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.
மேலும், தமிழக மாவட்டம் நாகப்பட்டினத்தில் நடைபெற்ற துவக்கவிழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |