பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு ரூ.295 கோடி.., இந்திய அரசு
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு ரூ.295 கோடி என்று இந்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு பயண செலவு
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்கள் மற்றும் அதற்கான செலவினங்கள் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எழுத்து மூலம் பதிலளித்தார்.

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., தேர்வை எழுதுவதற்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யம்
அந்த பதிலில் அவர், "கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2024 வரை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு சுமார் ரூ.295 கோடி" என்று தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, இந்த ஆண்டு அவர் மேற்கொண்ட அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் உள்பட 5 நாடுகளுக்கு ஏற்பட்ட பயண செலவு ரூ.67 கோடி என கூறியுள்ளார்.
இதனிடையே, இந்த ஆண்டு மொரீஷியஸ், சைப்ரஸ், கனடா, குரேஷியா, கானா, டிரினிடாட்-டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா போன்ற நாடுகளுக்கு மேற்கொண்ட பயண செலவு விவரம் இன்னும் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |