ஜேர்மனி சேன்ஸலரை சந்தித்த பிரதமர் மோடி: பின்னர் கூறிய விடயம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜேர்மனி சேன்ஸலரை சந்தித்தது பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்தார்.
நரேந்திர மோடி
மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி உலக தலைவர்களை சந்தித்து வருகிறார்.
ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள இத்தாலி சென்றடைந்த பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்தார்.
அதன் பின்னர் தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ''அமெரிக்க ஜனாதிபதி பைடனை சந்திப்பதில் எப்போதும் மகிழ்ச்சி உலக நன்மைக்காக இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்படும்'' என கூறியுள்ளார்.
மூலோபாய கூட்டாண்மை
அதேபோல் ஜேர்மனி சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸை சந்தித்தது குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.
அதில், ''சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ் உடனான இன்றைய சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்தியாவிற்கும், ஜேர்மனிக்கும் இடையிலான மூலோபாய கூட்டாண்மை உள்ளடக்கிய மற்றும் நிலையான உலகளாவிய வளர்ச்சியை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்க முடியும்'' என தெரிவித்துள்ளார்.
Das heutige Treffen mit Bundeskanzler Scholz war sehr produktiv. Die strategische Partnerschaft zwischen Indien und Deutschland kann eine wichtige Rolle bei der Förderung eines inklusiven und nachhaltigen globalen Wachstums spielen.
— Narendra Modi (@narendramodi) June 14, 2024
@Bundeskanzler pic.twitter.com/VzkL6drLxD
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |