100 படத்தை ஒரே நேரத்தில் டவுன்லோட் செய்ய 6ஜி தொழில்நுட்பம்!
இந்தியாவின் 77-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடி ஏற்றினார்.அதனை தொடர்ந்து நாட்டு மக்களிடம் பல கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
தொழில்நுட்பத்தை பற்றி மோடி சில கருத்துக்களை கூறியுள்ளார், நாட்டிற்கு விரைவில் 6ஜி தொழிட்பம் வரப்போவதாக தெரிவித்துள்ளார்.
6ஜி தொழில்நுட்பம்
Techrepublic
இந்தியா 5ஜி-லிருந்து 6ஜி-க்கு மாறும் செயல்முறைகள் தற்போது நடந்துகொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.உலகில் உள்ள அனைத்து நாடுகளை காட்டிலும் இந்தியாவில் தான் 5ஜி சேவை வேகமாக கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
தற்போது ரிலையன்ஸ் மற்றும் ஜியோ 5ஜி சேவையை கொண்டு உள்ளது.இதற்காக நாடு முழுக்க 5ஜி டவர்கள் பொருத்தப்பட்டுள்ளன.தற்போது ஏர்டெல் நிறுவனமும் 5ஜி சேவையை தொடங்கி உள்ளது.
அதிவேகத்தில் செயல்படும் 5ஜி சேவைக்கு நாடு முழுக்க அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. 5Gயை தொடர்ந்து தற்போது 6G-க்கான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது.
5G-க்கும் 6G-க்கும் உள்ள வித்யாசம்
5Gயைக் காட்டிலும் 6Gயின் வேகம் 100 மடங்கு அதிகமாக இருக்கும்.
5ஜி தொழில் நுட்பத்தில் ஒரு வினாடிக்கு 10 ஜிகாபைட் வேகத்தில் இணைய சேவை கிடைக்கும்.மேலும் 6ஜி தொழில்நுட்பத்தில் நமக்கு 1 டெராபைட் வேகத்தில் இணைய சேவைகிடைக்கும்.
இந்த 6ஜி தொழில்நுட்பத்தின் மூலம் தொலைதூரத்தில் இருந்தே நம்மால் தொழிற்சாலைகளை கட்டுப்படுத்த முடியும்,தானியங்கி முறையில் செயல்படும் கார்களை உருவாக்க முடியும் என இப்படிப் பல வசதிகள் அதில் கொட்டிக் கிடக்கிறது.
6ஜி தொழில்நுட்பத்தில் நம்மால் 100+ படங்களை 1 நிமிடத்தில் டவுன்லோட் செய்யமுடியும்.
வேகம் மட்டுமின்றி இதில் பல புதிய வசதிகளும் உள்ளது. 5ஜி தொழில்நுட்பம் என்பது நிலத்தில் மட்டுமே செயல்படும். ஆனால், 6ஜி தொழில்நுட்பம் விமானத்திலும் செயல்படும். எனவே, 6ஜி தொழில்நுட்பம் வந்தால் விமானங்களில் கூட ஈஸியாக இணையச் சேவையை நாம் பயன்படுத்தலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |