என் அன்பு சகோதர சகோதரிகளே உங்கள் ஆதரவுக்கு நன்றி! தெலங்கானாவில் தோல்விக்கு பிரதமர் மோடியின் பதிவு
தெலங்கானா மாநிலத்தில் தோல்வியடைந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஆதரவுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
தெலங்கானாவில் தோல்வி
சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துள்ளது.
ஆனால், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸுடன் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. அம்மாநிலத்தில் காங்கிரஸ் 64 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ரேவந்த் ரெட்டி முதல்வராகிறார்.
ANI
நன்றி கூறிய மோடி
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தெலங்கானா மாநில தோல்வி குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், 'தெலங்கானாவின் என் அன்பு சகோதர சகோதரிகளே, பாஜகவுக்கு நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. கடந்த சில ஆண்டுகளாக இந்த ஆதரவு அதிகரித்து வருகிறது, வரும் காலங்களிலும் இந்த போக்கு தொடரும். தெலங்கானாவுடனான எங்களின் பந்தம் பிரிக்க முடியாதது மற்றும் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம். ஒவ்வொரு பாஜக காரியகர்த்தாவின் தீவிர முயற்சிகளையும் நான் பாராட்டுகிறேன்' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |