இந்திய பிரதமர் மோடியின் டுவிட்டரை சற்று முன்பு ஹேக் செய்து ஹேக்கர்கள் போட்ட பதிவு! குழம்பி போன இணையவாசிகள்
பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் மோடி, கடந்த மாதம் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த மாநாடு நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக கலந்து கொண்டார். அப்போது அவர் தற்போது டிஜிட்டல் உலகில் அதிக அளவில் பேசப்பட்டு வரும் கிரிப்டோகரன்சி பற்றி பேசினார்.
குறிப்பாக, கிரிப்டோகரன்சி அல்லது பிட்காயின் தொடர்பாக அனைத்து ஜனநாயக நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுவதும், நமது இளைஞர்களை கெடுக்கக்கூடிய தவறான கைகளில் அது போய்விடாமல் பார்த்துக் கொள்வதும் முக்கியம் என்று கூறினார்.
இந்நிலையில், இன்று சற்று முன்பு அவருடைய டுவிட்டர் பக்கத்தில், பிட்காயினை இந்தியாவில் சட்டப்பூர்வமாக்குவதாக ஹேக்கர்கள் ஹேக் செய்து அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர்.
இதைக் கண்ட இணையவாசிகள் பலர், கடந்த மாதம் தான் கிரிப்டோகரன்சி குறித்து பேசிய இவர், இப்போது என்ன இப்படி என கூறுகிறார் என்று குழம்பி போய் இருந்தனர்.
மேலும், இந்தியாவில் இது எப்போது சட்டப்பூர்வமாக்கப்படும் என்று காத்திருந்தவர்கள் இதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் டுவிட்டர் சிறிது நேரம் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகவும், தற்போது அது சரி செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.