இந்திய பிரதமர் மோடியை சந்தித்த மேக்ரான்: எலிசி அரண்மனையில் விருந்து
பிரான்ஸில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை சந்தித்தார்.
மூன்று நாட்கள் அரசுமுறை பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரான்சிற்கு சென்றுள்ளார்.
தலைநகர் பாரிஸில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தலைவர்கள் இருவரும் எலிசி அரண்மனையில் விருந்து உண்டனர்.
இதனைத் தொடர்ந்து சர்வதேச செயற்கை நுண்ணறிவு செயல்பாட்டு உச்சி மாநாட்டில் மேக்ரானுடன் மோடி பங்கேற்க்க உள்ளார்.
மேலும் அவருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை, வணிக நிறுவன தலைவர்களுடன் சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகளிலும் மோடி பங்கேற்கிறார்.
இதற்கிடையில், இந்த விருந்து நிகழ்ச்சியில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் பிரதமர் மோடியை சந்தித்தார்.
ட்ரம்ப் நிர்வாகத்தில் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் மோடியை சந்திப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |