ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா திருமணம்: பிரதமர் மோடி வாழ்த்து
பிரபல நட்சத்திர ஜோடி விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவின் திருமணம், இன்று காலை, ராஜஸ்தானின் உதய்ப்பூரில் நடைபெற்றது.
இந்நிலையில், விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவின் திருமணத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
பிரதமர் மோடி வாழ்த்து
பிரதமர் மோடி அனுப்பியுள்ள செய்தியில், விஜய் மற்றும் ராஷ்மிகாவின் திருமண நாளில், தேவர கொண்டா மந்தனா குடும்பங்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

விஜயின் பெற்றோர் தன்னை தங்கள் மகனுடைய திருமணத்துக்கு அழைத்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தம்பதியருக்கு ஒரு நீண்ட வாழ்த்து மடலை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், விஜய், ராஷ்மிகா குறித்து பல்வேறு விடயங்களைக் குறிப்பிட்டுள்ள அவர், தம்பதியரின் எதிர்காலம் சிறப்பாக அமையவேண்டும் என ஆசீர்வதித்துள்ளதுடன், இரு குடும்பங்களுக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |