சிக்ஸர் மழையில் தெறிக்கவிட்ட மொயீன் அலி: அரையிறுதியில் நொறுங்கிய தென் ஆப்பிரிக்கா
Moeen ali 70 runs vs south africa champions: இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணி 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸை வீழ்த்தியது.
லெஜெண்ட் உலக சாம்பியன்ஷிப் முதல் அரையிறுதியில், இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணி 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸை வீழ்த்தியது.
முதல் அரையிறுதிப் போட்டி
இங்கிலாந்து சாம்பியன்ஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணிகளுக்கு இடையிலான லெஜெண்ட் உலக சாம்பியன்ஷிப் முதல் அரையிறுதிப் போட்டி ஷார்ஜாவில் நடந்தது.
Robbie Frylinck strikes! 🔥 Captain Ravi Bopara departs early as South Africa Champions turn up the pressure on England Champions in this crucial semi-final! 🏏 . . . . #wcl #wcl2026 #warofchampions #southafricachampions https://t.co/bp7MTel17L
— World Championship Of Legends (@WclLeague) October 16, 2026
முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழக்க, மொயீன் அலி (Moeen Ali) சிக்ஸர்களை பறக்கவிட்டார். அவருடன் கைகோர்த்த ஜோ டென்லியும் அதிரடியில் மிரட்ட அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
ருத்ரதாண்டவம் ஆடிய மொயீன் அலி 41 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 70 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
Moeen Ali steps up to rebuild the innings with a crucial 70 off 41 balls, smashing 3 fours and 6 sixes to keep England Champions in the fight! 🏏🔥 https://t.co/0Egyler5Nq
— World Championship Of Legends (@WclLeague) October 16, 2026
அடுத்து வந்த மஸ்டார்ட் (1), சமித் (0) சொதப்ப டோபி ரோலண்ட் 13 பந்துகளில் 22 ஓட்டங்கள் எடுத்தார். டென்லி 30 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 59 ஓட்டங்கள் விளாச, இங்கிலாந்து அணி 189 ஓட்டங்கள் குவித்தது.
ரோபி ஃப்ரைலிங்க் 3 விக்கெட்டுகளும், ஹர்டுஸ் வில்ஜோன் மற்றும் ஆரோன் பான்கிசோ தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இங்கிலாந்து சாம்பியன்ஸ் வெற்றி
பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் ஏபி டி வில்லியர்ஸ் 25 (13) ஓட்டங்களும், ஃபாப் டூபிளெஸ்ஸிஸ் 25 (13) ஓட்டங்களும் விளாசி ஆட்டமிழந்தனர்.
AB de Villiers goes BIG! 💥🚀 That massive six is pure class and power from Mr. 360°! 🏏🔥 https://t.co/GpVXmbNEHO
— World Championship Of Legends (@WclLeague) October 16, 2026
மோர்னே வான் விக் 31 ஓட்டங்களில் வெளியேற, ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 16.5 ஓவர்களில் 143 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
டைமல் மில்ஸ், அஜ்மல் ஷாஸாத் தலா 3 விக்கெட்டுகளும், சமித்படேல் 2 விக்கெட்டுகளும், டோபி ரோலண்ட் மற்றும் ரவி போபரா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
Faf du Plessis goes on the attack with a massive hit! 🔥 Putting England Champions under immense pressure with his explosive strokeplay in this high-stakes semi-final! https://t.co/GAJsWonHXE
— World Championship Of Legends (@WclLeague) October 16, 2026
Seal the deal for England Champions for a 46-run victory, to book their place in the Grand Finale! 🏆🔥 . . . . #wcl #wcl2026 #englandchampions #semifinals https://t.co/MOSmCcqsBx
— World Championship Of Legends (@WclLeague) October 16, 2026