கோஹ்லியின் ஸ்டம்பை தெறிக்கவிட்ட மோயின் அலி! டக் அவுட் ஆகி வெளியேறிய வீடியோ காட்சி
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், கோஹ்லி டக் அவுட் ஆகி வெளியேறும் வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது.
அதன் படி நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இந்திய அணிக்கு துவக்க வீரரான சுப்மன் கில் முதல் ஓவரின் நான்காவது பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.
His face ??? #Kohli pic.twitter.com/zx5Q9m0bmb
— Sam Clarkson (@SamClarkson120) February 13, 2021
அதன் பின் வந்த புஜாராவுடன் ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நிதானமாக ஆடி வந்த புஜாரா 21 ஓட்டங்களில் வெளியேற, அடுத்து வந்த கேப்டன் விராட் கோஹ்லி, நான்கு பந்துகள் சந்தித்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் மொயின் அலி பந்து வீச்சில் போல்டாகி பவுலியன் திரும்பினார்.
போல்ட் ஆனவுடன் கோஹ்லி, அது எப்படி போல்ட்டா? வாய்ப்பில்லையே? என்பது போல் ஒரு வித முக சைகையுடன் சென்றார். அந்த வீடியோவை இங்கிலாந்து ரசிகர்கள் சிலர் கிண்டல் செய்யும் விதமாக பகிர்ந்து டுவிட் செய்து வருகின்றனர்.