என் குடும்பமே பெருமைப்படும்! பிரித்தானிய ராணி விழாவில் கவுரவிக்கப்படும் இங்கிலாந்து வீரர் உருக்கம்
பிரித்தானியாவின் மகாராணியின் பிளாட்டினம் ஜூபிலி விருதுகள் பட்டியலில், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி இடம்பெற்றுள்ளார்.
மகாராணி எலிசபெத்தின் பவளவிழா கொண்டாட்டத்தில் வழங்கப்படும் விருதுகள் பட்டியலில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வீரர் மொயீன் அலியின் பெயர் இடம்பெற்றுள்ளது. அவருக்கு Order of the British Empire என்ற விருது வழங்கப்பட உள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு அவர் அளித்த பங்களிப்புக்காக அவருக்கு இந்த கவுரவம் அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து மகிழ்ச்சி அடைந்துள்ள மொயீன் அலி கூறுகையில், 'நான் அங்கீகரிக்கப்பட்டது எனக்கு பெரிய கவுரவம். இது ஆச்சரியமாக இருக்கிறது. இதனை நினைத்து எனது குடும்பம் மகிழ்ச்சியும், பெருமையுமடைவர்.
எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த விடயம் எனது பெற்றோரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது என்பதை நான் அறிவேன். இது ஓட்டங்கள் மற்றும் விக்கெட்டுகள் குறித்து அல்ல. இது நான் கடந்து வந்த பயணம் மற்றும் எல்லாவற்றையும் பற்றியது என நினைக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
Photo Credit: AFP
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றபோது, அந்த தொடரில் மொயீன் அலியும் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.