நிக்கோலஸ் பூரனின் அணியை முடித்துவிட்ட மொயீன் அலியின் ஃபால்கன்ஸ்
Antigua and barubuda falcons win by 8 runs: கரீபியன் பிரீமியர் லீக் 2026 தொடரின் 24வது போட்டியில், ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ட்ரினிடாட்டில் நடந்த ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான கரீபியன் டி20 போட்டியில், ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஹசன் நவாஸ்
ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணியில் ராகீம் கார்ன்வால் 7 பந்துகளில் 20 ஓட்டங்கள் விளாசினார்.
பின்னர் எவின் லீவிஸ் 24 ஓட்டங்களும், அமீர் ஜாங்கூ 6 ஓட்டங்களும் எடுத்து வெளியேற, மொயீன் அலி மற்றும் ஹசன் நவாஸ் அதிரடி கூட்டணி அமைத்தனர்.
ஹசன் நவாஸ் (Hasan Nawaz) 48 பந்துகளில் 76 ஓட்டங்களும் (3 சிக்ஸர், 9 பவுண்டரிகள்), மொயீன் அலி (Moeen Ali) 24 பந்துகளில் 32 ஓட்டங்களும் விளாசினர்.
இதன்மூலம் ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணி 183 ஓட்டங்கள் குவித்தது. அகேல் ஹொசேய்ன், லஹிரு குமார, உஸ்மான் மற்றும் கிரேவ்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
ஆன்டிகுவா வெற்றி
அடுத்து களமிறங்கிய ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 93 ஓட்டங்களுக்கு 5 விக்கெட் என தடுமாறியது. அப்போது கிரோன் பொல்லார்ட் (Kieron Pollard), ஜோஷுவா கூட்டணி அமைத்தனர்.
பொல்லார்ட் 41 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ட்ரின்பாகோ அணி 20 ஓவர்களில் 175 ஓட்டங்கள் எடுத்ததால், 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் வெற்றி பெற்றது.
இறுதிவரை களத்தில் நின்ற ஜோஷுவா டா சில்வா (Joshua Da Silva) 31 பந்துகளில் 5 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் விளாசினார்.
ராகீம் கார்ன்வால் 3 விக்கெட்டுகளும், ஜோஷுவா டா சில்வா 2 விக்கெட்டுகளும், ஷாமர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |