இளவரசி டயானாவின் காதலரின் தந்தை மீது பெண்கள் பரபரப்புக் குற்றச்சாட்டு
இளவரசி டயானாவின் காதலருடைய தந்தை, தங்களை சீரழிக்க முயன்றதாக மூன்று பெண்கள் புகாரளித்துள்ள விடயம் பிரித்தானிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியலில் பரபரப்பு ஏற்படக் காரணம், இந்த விடயத்தில் பிரதமர் கேய்ர் ஸ்டார்மரின் பெயரும் இழுக்கப்பட்டுள்ளதுதான்!
இளவரசி டயானாவின் காதலரின் தந்தை
இளவரசி டயானாவுக்கும் சார்லசுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, 1992ஆம் ஆண்டு, இருவரும் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தனர்.
என்றாலும், 1996ஆம் ஆண்டுதான், சட்டப்படி இருவரும் விவாகரத்து செய்ததாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், இதற்கிடையில், Hasnat Khan என்னும் மருத்துவருடன் இரண்டு ஆண்டுகளாக பழகிவந்தார் டயானா. அதன்பின், 1997ஆம் ஆண்டு ஜூலை மாதம், எகிப்து நாட்டு திரைப்பட தயாரிப்பாளரான டோடி என்பவரைக் காதலிக்கத் துவங்கினார் டயானா.
இருவரும் புதுவாழ்வைத் துவக்க இருப்பதாக பரபரப்பாக செய்திகள் வெளியாகத் துவங்கிய நிலையில், அடுத்த மாதமே பாரீஸில் நிகழ்ந்த கார் விபத்தொன்றில் டயானாவும் டோடியும் பலியானார்கள்.
டயானாவின் காதலரின் தந்தை மீது பெண்கள் பரபரப்புக் குற்றச்சாட்டு
தற்போது, டயானாவின் காதலரான, அந்த டோடியின் தந்தை மீதுதான் பெண்கள் பரபரப்புக் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளார்கள்.
புகழ்பெற்ற Harrods என்னும் ஆடம்பரப் பொருட்கள் விற்பனையகத்தின் உரிமையாளராக இருந்தவரும், இளவரசி டயானாவின் காதலர் டோடியின் தந்தையுமான அந்த சர்ச்சைக்குரிய நபரின் பெயர், முகமது ஃபயத் (Mohamed Fayed).
தான் Harrodsஇல் பணிக்கமர்த்தும் இளம்பெண்கள் தன்னிடம் நெருக்கமாக பழகும் வகையில் அவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார் ஃபயத்.
ஃபயத் தன்னை தனது மகனான டோடியின் ஹொட்டல் ஒன்றில் வைத்து வன்புணர முயன்றதாகவும், அவரை மிதித்துத் தள்ளிவிட்டு தான் தப்பிவிட்டதாகவும் Lindsay Mason (20) என்னும் இளம்பெண் புகார் தெரிவித்துள்ளார்.
Gemma (24) என்னும் இளம்பெண்ணை உதவியாளராக பணிக்கமர்த்திய ஃபயத், அவரை தவறாக தொடுவது முதல் பல தொல்லைகள் கொடுத்துள்ளார். தனது விருப்பத்துக்கு Gemma இணங்க மறுத்ததும், அவரை மற்றவர்களுக்கு முன் அவமதிக்கும் வகையில் தொடர்ந்து நடத்தியுள்ளார் ஃபயத்.
Katherine என்னும் இளம்பெண்ணை உதவியாளராக பணிக்கமர்த்திய ஃபயத், Katherine உடலை மறைக்கும் வகையில் கண்ணியமான உடையணிந்திருந்ததால் அவர் மீது கடுமையாக கோபப்பட்டுள்ளார்.
கவர்ச்சியாக உடையணிய வற்புறுத்தியும் Katherine மறுக்கவே, நெஞ்சு தெரிய உடையணியுமாறு சத்தமிட்டு, Katherineஉடைய சட்டையின் மேல் பொத்தான்களை பிய்த்து எறிந்திருக்கிறார் ஃபயத்.
ஒருமுறை, தான் தங்கும் அறையில் தாழ்ப்பாள்கள் பொருத்தப்படவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த Katherine, ஒரு நாற்காலி மீது சூட்கேஸ் ஒன்றை வைத்து, கதவை திறக்கமுடியாதபடி செய்திருக்கிறார்.
அன்று இரவு அவரது அறைக்கு வந்த ஃபயத், Katherineஉடைய அறைக்கதவைத் திறக்கமுயன்று முடியாததால், மறுநாள், என் வீட்டிலேயே கதவை மூட உனக்கு என்ன தைரியம், இனி அப்படிச் செய்தால் அவ்வளவுதான் என சத்தமிட்டிருக்கிறார்.
பின்னர், லண்டனிலுள்ள அலுவலகம் ஒன்றில் Katherineஐ ஃபயத் சீரழிக்க முயல, அவர் திருப்பித் தாக்க, மறுநாள் Katherineஉடைய வேலை போய்விட்டது.
தற்போது இந்த மூன்று பெண்களும் ஃபயத் தங்களை சீரழிக்க முயன்றதாக ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ள விடயம், பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் வெறும் மூன்று பேர் அல்ல, எட்டு பெண்கள் ஃபயத் தங்களை சீரழித்ததாகவும் ஐந்து பெண்கள் ஃபயத் தங்களை சீரழிக்க முயன்றதாகவும் வெவ்வேறு பிரித்தானிய ஊடகங்களுக்கு தொடர்ந்து பேட்டிகள் கொடுத்துவருகிறார்கள்.
விடயம் என்னவென்றால், வழக்கை எதிர்கொள்ள ஃபயத் உயிருடன் இல்லை. அவர் 2023ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் 30 ஆம் திகதி மரணமடைந்துவிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |