டோனிக்கு முன்னரே ஹெலிகாப்டர் ஷாட் அடித்துள்ள இந்திய அணி வீரர்! யார் தெரியுமா? வைரல் வீடியோ
டோனிக்கு முன்னரே இந்திய அணி ஜாம்பவான் அசாருதீன் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான டோனி கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
அதேபோல் டோனி விளையாடும் ‘ஹெலிகாப்டர்’ ஷாட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று.
Classic Azhar pic.twitter.com/DeRJjfQlzl
— Stone Cold (@StoneCo06301258) May 15, 2021
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் டோனி போல் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 1996-ம் ஆண்டு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் இப்படி அடித்துள்ளார்.
அப்போட்டியில் முகமது அசாருதீன், 77 பந்துகளில் 109 ரன்கள் விளாசியிருந்தார்.