இந்திய ரசிகர்களே தயவுசெய்து அவமானப்படுத்தாதீர்கள்! அர்ஷ்தீப் சிங்குக்காக பாகிஸ்தான் வீரர் வேண்டுகோள்
இந்திய பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்குக்காக பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
துபாயில் நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலியின் எளிதான கேட்சை இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் தவற விட்டார்.
இது ரசிகர்கள் மட்டுமன்றி இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. ஆசிப் அலி 8 பந்துகளில் 16 ஓட்டங்கள் எடுத்து அர்ஷ்தீப் சிங் ஓவரில் ஆட்டமிழந்தார். ஆனாலும் அர்ஷ்தீப் சிங்கின் இறுதி ஓவரில் பாகிஸ்தான் அணி வெற்றிக்கான ஓட்டங்களை எடுத்தது இன்னும் அவர் மீது இந்திய ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதன் வெளிப்பாடாக சமூக வலைதங்களில் அர்ஷ்தீப் சிங்கை ரசிகர்கள் மோசமாக வசைபாடி வருகின்றனர். ரசிகர்களின் இந்த செயலுக்கு பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
PC: Getty Images
அவர் வெளியிட்ட பதிவில், 'இந்திய அணி ரசிகர்கள் அனைவருக்கும் எனது வேண்டுகோள். நாம் மனிதர்களாக இருப்பதால் விளையாட்டில் தவறு செய்கிறோம். தயவு செய்து இந்த தவறுகளில் யாரையும் அவமானப்படுத்தாதீர்கள், அர்ஷ்தீப் சிங்கையும் தான்' என தெரிவித்துள்ளார்.
My request to all Indian team fans. In sports we make mistakes as we r human. Please don’t humiliate anyone on these mistakes. @arshdeepsinghh
— Mohammad Hafeez (@MHafeez22) September 4, 2022