பாகிஸ்தான் தோல்விக்கு இது தான் காரணம்! 2 நாட்கள் ஐசியூவில் இருந்து வந்த ரிஷ்வான்: கலங்கும் ரசிகர்கள்
ஆஸ்திரேலியா அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் கடைசி நேரத்தில் கேட்சை விட்டது தான் என்று அந்தணியின் கேப்டன் பாபர் அசாம் கூறியுள்ளார்.
உலகக்கோப்பை டி20 தொடரின் நேற்றைய இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்நிலையில், போட்டி முடிந்த பின்பு பாகிஸ்தான் அணியின் கேப்டன் மற்றும் அணியின் ஸ்டாப்(ஊழியர்) பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது, இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி 52 பந்தில், 67 ஓட்டங்கள் குவித்த மொகமது ரிஷ்வான், போட்டிக்கு முன்பு, அதாவது கடந்த 9-ஆம் திகதி முதல் மார்பில் நோய் தொற்றால் கடும் அவதிப்பட்டார்.
இதனால் அவர் ICU-வில் வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. போட்டி துவங்குவதற்கு 48 மணி நேரம் வரை அவர் ஐசியூ-வில் தான் இருந்தார். அதன் பின் அதில் இருந்து அதிர்ஷ்டவசமாக மீண்ட அவர், போட்டி விளையாட தகுதியானவர் ஆனார்.
இருப்பினும், போட்டியின் ஆரம்பகட்டத்தில் அவர் தடுமாறியதை பார்க்க முடிந்தது. அதன் பின் அவர் சிறப்பாக விளையாடியதாக கூறினார்.
— Hassam (@Nasha_e_cricket) November 11, 2021
மேலும், போட்டி தோல்வி குறித்து பாபர் அசாம் கூறுகையில், பேட்டிங்கை பொறுத்தவரை நாங்கள் திட்டமிட்ட ரன்களை எடுத்துவிட்டோம். ஆஸ்திரேலியா போன்ற ஒரு சிறப்பான அணிக்கு இறுதி நேரத்தில், ஒரு வாய்ப்பு கொடுத்தால், அதற்கான விலை மிகவும் உயர்வாக இருக்கும். இறுதிகட்டத்தில் கோட்டை விட்ட ஒரு கேட்ச்(Hasan Ali) திருப்புமுனையாக அமைந்துவிட்டது.
அந்த கேட்சை பிடித்திருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கும். ஆனால், தன்னை பொறுத்தவரை இந்த முழு உலகக்கோப்பை டி20 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியுள்ளோம்.
இதில் இருந்து சில விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளோம். சிறிய தவறுகள் எங்களை தோல்விக்கு கொண்டு சென்றுவிட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்தவரை ரசிகர்களின் ஆதரவு எங்களுக்கு எப்போதும், அதிகம் இருக்கும். இங்கு நாங்கள் விளையாடுவதை மிகவும் ரசிக்கிறோம் என்று கூறி முடித்தார்.
இந்த பேட்டிக்கு பின் மொகமது ரிஷ்வான் ஐசியூவில் இருந்து வந்து அணிக்காக விளையாடியுள்ளார் என்பதை நினைத்து பாகிஸ்தான் ரசிகர்கள் அவரை நினைத்து பெருமைப்படுவதாக குறிப்பிட்டு வருகின்றனர்.