இந்தியாவை தோற்கடித்த மகிழ்ச்சி., என்னிடம் யாரும் பணம் வாங்குவதில்லை! முகமது ரிஸ்வான் நெகிழ்ச்சி
டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவை வென்றதால் பாகிஸ்தானில் தான் எங்கும் சென்று பொருள் வாங்கினாலும் தன்னிடம் யாரும் பணம் வாங்குவதில்லை என பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேரடி போட்டிகளில் விளையாடுவதில்லை. இரு அணிகளும் ஐசிசி தொடர்களில் மட்டுமே விளையாடுவதால் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டிகள் எப்போழுதும் எதிர்பார்ப்பை எகிற வைக்கும். அதனால் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருப்பர்.
இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான்
Getty Images
2021-ம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி நடைபெற்றது. இதில் பாகிஸ்தானிடம் இந்தியா படுதோல்வியடைந்தது.
அதிர்ச்சியூட்டும் விதமாக 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தன் அணி வெற்றி பெற்று முதன் முறையாக ஐசிசி டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி புதிய வரலாறு படைத்தது.
உங்களுக்கு எல்லாமே இலவசம்
இந்நிலையில், இது குறித்து பேசிய பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் இந்தியாவை வென்றதால் தனக்கு நல்ல மரியாதை கிடைத்ததாக கூறியுள்ளார்.
Getty Images
2021 உலகக்கோப்பை டி20 போட்டியில் இந்திய அணியை தோற்கடித்த பிறகு நான் பாகிஸ்தானில் உள்ள எந்த கடைக்கு சென்று எந்த பொருள் வாங்கினாலும் என்னிடம் யாரும் பணமே வாங்கவில்லை. உங்களுக்கு எல்லாமே இலவசம்தான் என்று சொன்னார்கள்.
அப்போழுது தான் பாகிஸ்தான் மக்களுக்கு அந்த வெற்றி எவ்வளவு முக்கியம் என என்னால் அப்போதுதான் உணர முடிந்தது என்று கூறியுள்ளார்.