பவுண்டரில் எல்லைக்கு ஓடி கேட்ச் பிடித்து மிரட்டிய பாகிஸ்தான் விக்கெட் கீப்பர்! ஒரு விக்கெட்டில் தோற்ற பரிதாபம்
மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பிடித்த கேட்ச் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் அணி, மேற்கிந்திய தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 12-ஆம் திகதி நடைபெற்றது. இதில் மேற்கிந்திய தீவு அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 217 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆக, அதன் பின் ஆடிய மேற்கிந்திய தீவு அணி முதல் இன்னிங்ஸில் 253 ஓட்டங்களுள் ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து 36 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய பாகிஸ்தான் அணி 203 ஓட்டங்கள் ஆல் அவுட் ஆகியதால், மேற்கிந்திய தீவு அணி 167 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஆடிய மேற்கிந்திய தீவு அணி, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் 168 ஓட்டங்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மேற்கிந்திய தீவு அணி 1-0 என்று முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பிடித்த கேட்ச் இரு அணி வீரர்களையும் மிரள வைத்துள்ளது.
MO RIZWAN THAT IS INSANE!!!!!!!!!!!!!!!!! pic.twitter.com/ZwapHK6Zoo
— Cricket on BT Sport (@btsportcricket) August 15, 2021
மேற்கிந்திய தீவு அணி இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிக் கொண்டிருந்த போது, அந்தணியின் 9-வது விக்கெட்டான Jomel Warrican-ஐ பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் தன்னுடைய அற்புதமான கேட்ச் மூலம் வெளியேற்றினார்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.