கடைசி ஓவரில் சிக்ஸர்மழை! ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த வீரர் (வீடியோ)
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் சைப் ஹசன் மற்றும் தன்ஸித் ஹசன் அரைசதம் அடித்தனர்.
சைப் ஹசன், தன்ஸித் ஹசன்
வங்காளதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி புலவாயோவில் நடந்து வருகிறது.
Bangladesh post 186 runs on the board, setting the stage for an exciting contest. Now it's over to the bowlers to defend the total#BCB #Tigers #Bangladesh #Cricket #ZIMvBAN pic.twitter.com/DTPNp0EojZ
— Bangladesh Cricket (@BCBtigers) July 17, 2026
முதலில் துடுப்பாடிய வங்காளதேச அணியில் சைப் ஹசன், தன்ஸித் ஹசன் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
அதிரடி அரைசதம் அடித்த சைப் ஹசன் (Saif Hassan) 55 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, தன்ஸித் ஹசன் (Tanzid Hasan) 58 ஓட்டங்களில் வெளியேறினார். இந்தக் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 88 பந்துகளில் 120 ஓட்டங்கள் குவித்தது.
வாணவேடிக்கை
டௌஹித் ஹிரிடோய் (6), பர்வேஸ் ஹொசைன் (1) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். எனினும் யாசிர் அலி களமிறங்கியதும் சிக்ஸர் பறக்கவிட்டார்.
கடைசி ஓவரில் மொஹம்மது சைஃபுதின் தொடர்ச்சியாக 4 சிக்ஸர் அடித்து வாணவேடிக்கை காட்டினார். அதன்மூலம் ஒரே ஓவரில் 28 ஓட்டங்கள் கிடைக்க, வங்காளதேச அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ஓட்டங்கள் குவித்தது.
மொஹம்மது சைஃபுதின் (Mohammad Saifuddin) 10 பந்துகளில் 31 ஓட்டங்களும், யாசிர் அலி 12 பந்துகளில் 22 ஓட்டங்களும் எடுத்தனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |