நமது கிரிக்கெட்டின் இருண்ட காலம்! திறமையற்ற அதிகாரிகள் நீக்கப்பட வேண்டும் - பாகிஸ்தான் முன்னாள் வீரர்
பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இருந்து திறமையற்ற அதிகாரிகள் நீக்கப்பட வேண்டும் என்று முன்னாள் வீரர் முகமது யூசுப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தோல்வி
கொழும்பில் நடந்த போட்டியில் இந்தியாவிடம் 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வியுற்றது.
அவுஸ்திரேலியாவுக்கு மரண அடி கொடுத்த இலங்கை! கம்பீரமாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி..கேப்டன் கூறிய விடயம்
இப்போட்டியின் முடிவு பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பல விவாதங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
முன்னாள் வீரர்கள் பலரும் பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாடு குறித்து காட்டமான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
முகமது யூசுப் எதிர்வினை
அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான முகமது யூசுப்பும் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.
அவர், இந்தியாவிடம் அடைந்த தோல்வி தேசிய அணியின் திசை குறித்த ஆழமான கவலைகளை பிரதிபலிக்கிறது.
நமது கிரிக்கெட்டில் இருண்ட கட்டம் இது. திறமையற்ற அதிகாரிகள் முக்கியப் பாத்திரங்களில் இருந்து நீக்கப்பட வேண்டும்.

அரசியல் தலையீடு மற்றும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் முடிவுக்கு வராவிட்டால், பாகிஸ்தான் ஒரு போட்டி அணியை கட்டியெழுப்ப போராடும்.
ஷாஹீன் அப்ரிடி, பாபர் அஸாம் மற்றும் ஷதாப் கான் போன்ற மூத்த வீரர்களின் காலம் T20 வடிவத்தில் முடிந்து போகலாம். அணியை மீண்டும் கட்டியெழுப்ப புதிய வீரர்களை தேர்வாளர்கள் கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |