விராட் கோலியை முந்திய முகமது ஷமி! எதில் தெரியுமா? இது ரசிகர்களுக்கே ஷாக்
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் கோலியை முந்தி கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் முகமது ஷமி.
இந்தியா அபார வெற்றி
இந்தியா - அவுஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி இன்னிங்சிஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் இந்தியாவின் இன்னிங்சில் பேட்டிங் ஆடிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 47 பந்தில் 37 ரன்கள் குவித்தார். இதில் அவர் 2 பவுண்டரியும், 3 சிக்சரும் பறக்க விட்டார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த வீரர் பட்டியலில் அவர் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை முந்தி உள்ளார்.
PTI
கோலியை முந்திய ஷமி
கோலி இதுவரை 105 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 24 சிக்சர்கள் அடித்துள்ளார். ஷமி இதுவரை 61 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 25 சிக்சர்கள் அடித்து விராட் கோலியை முந்தி உள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் விரேந்தர் சேவாக் (90) முதல் இடத்திலும், தோனி (78) 2ம் இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் (69) 3ம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.