டி20 உலகக்கோப்பையில் ஆடும் முகமது ஷமி! அவர் மனைவி கொடுத்துள்ள பரபரப்பு புகார்
முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகன்
ரயில் பயணத்தின் போது டிக்கெட் பரிசோதகர் மோசமாக நடந்ததாக குற்றச்சாட்டு.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகன் பொலிசில் கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முகமது ஷமி மற்றும் அவர் குடும்பத்தார் தன்னை துன்புறுத்துவதாக ஹசின் கடந்த 2018ல் குற்றஞ்சாட்டி தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தார். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் பீகாரில் இருந்து கொல்கத்தாவுக்கு ரயிலில் ஹசின் பயணம் செய்திருக்கிறார்.
அப்போது டிக்கெட் பரிசோதகர் தன்னிடம் மோசமான வார்த்தைகளை பேசி தவறாக நடந்து கொண்டாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதோடு அவர் தன்னுடைய செல்போனை வாங்கி தூக்கி எறிந்தார் எனவும் தெரிவித்துள்ளார்.
Facebook / AP
பின்னர் பாதுகாப்பு காவலர்களின் கீழ் ஊருக்கு வந்து சேர்ந்ததாக தெரிவித்துள்ளார். ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி கூறுகையில், இந்த விவகாரத்தில் இதுவரை அதிகாரப்பூர்வ புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
எவ்வாறாயினும், இது குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.