ஐபிஎல் வரலாற்றில் படுமோசமான சாதனை படைத்த இந்திய வீரர்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர் முகம்மது ஷமி (Mohammed Shami) ஐபிஎல் வரலாற்றில் படுமோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.
முகம்மது ஷமி
ஐதராபாத்தில் நேற்று நடந்த போட்டியில் SRH மற்றும் PK அணிகள் மோதின.
முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 245 ஓட்டங்கள் குவிக்க, பின்னர் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 19வது ஓவரிலேயே 247 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இப்போட்டியில் சன்ரைசர்ஸ் வீரர் முகம்மது ஷமி 4 ஓவர்கள் வீசி 75 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார். ஆனால் ஒரு விக்கெட்டைக் கூட அவர் வீழ்த்தவில்லை.
மோசமான சாதனை
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்த இந்தியர் எனும் மோசமான சாதனையைப் படைத்தார்.
அதேபோல் ஒட்டுமொத்த ஐபிஎல் வீரர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார். 76 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்த ஜோப்ரா ஆர்ச்சர் முதலிடத்தில் உள்ளார்.
ஷமிக்கு அடுத்த இடத்தில மோஹித் ஷர்மா (73), பசில் தம்பி (70), யஷ் தயாள் (69) ஆகியோர் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |