முதல் பந்திலே இங்கிலாந்து வீரரின் ஸ்டெம்ப்பை தெறிக்கவிட்ட சிராஜ்! டக் அவுட் வெளியேறும் காட்சி
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அற்புதமாக பந்து வீசி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்திய வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன் தினம் துவங்கியது.
இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி கே.எல்.ராகுலின் அபார சதத்தால் 364 ஓட்டங்கள் குவித்தது.
இதைத் தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 119 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
Siraj on ??
— SonyLIV (@SonyLIV) August 13, 2021
2 wickets in 2 balls for the speedster as he sends Sibley and Hameed packing ?
Tune into #SonyLIV now ? https://t.co/E4Ntw2hJX5 ??#ENGvsINDonSonyLIV #ENGvIND #DomSibley #HaseebHameed #Wickets pic.twitter.com/hSPcbQQIB6
இந்நிலையில், இப்போட்டியில் இந்திய அணியின் இளம் வீரரான மொகமது சிராஜ் தன்னுடைய அற்புதமான பந்து வீச்சின் மூலம் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
துவக்க வீரரான டாம் சிப்ளியை சிராஜ் அவுட்டாக்கியவுடன், அடுத்தபடியாக இளம் வீரரான ஹசீப் அகமது களமிறங்கினார். ஆனால், களமிறங்கிய முதல் பந்திலே சிராஜ் தன்னுடைய துல்லியமான பந்து வீச்சின் மூலம் போல்டாக்கி வெளியேற்றினார்.
நீண்ட ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்து அணியில் இடம் கிடைத்த போதும், ஹசீப் அகமது டக் அவுட் ஆகி வெளியேறியது, அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.