வெறுப்பேற்றிய இங்கிலாந்து ரசிகர்களுக்கு விரல்களால் பதிலடி கொடுத்த சிராஜ்! வெளியான வீடியோ
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து ரசிகர்களுக்கு இந்திய வீரர் சிராஜ் கொடுத்த பதிலடி வீடியோ தற்போது இந்திய ரசிகர்களால் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கிடையே இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்ற முடிந்த நிலையில், 1-0 என்று இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் கையே அதிகம் ஓங்கியிருந்தது. ஏனெனில் லார்ட்சில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஜெயிக்க வேண்டிய போட்டியை இங்கிலாந்து அணி தோற்றதால், கடும் விமர்சனத்திற்குள்ளானது.
Mohammed Siraj signalling to the crowd “1-0” after being asked the score.#ENGvIND pic.twitter.com/Eel8Yoz5Vz
— Neelabh (@CricNeelabh) August 25, 2021
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலே நேற்று இங்கிலாந்து அணி கடும் ஆக்ரோசத்துடன் விளையாடியது. வீரர்கள் எப்படியே அதே போன்று மைதானத்திற்கு வெளியில் இருந்த இங்கிலாந்து ரசிகர்களும் அப்படியே இந்தியா வீரர்களை டார்கெட் செய்து, தாக்கி வந்தனர்.
அந்த வகையில், இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான மொகமது சிராஜ் பவுண்டரி எல்லையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த போது, மைதானத்தில் இருந்த இங்கிலாந்து ரசிகர்கள் அவரை வெறுப்பேற்றும் வகையில்,எங்கள் அணியின் ஸ்கோரைப் பாரு என்று செய்கை செய்தனர்.
அப்போது, மொகது சிராஜ் தன்னுடைய விரல்கள் மூலம் நாள் ஒன்று நீங்கள் ஜீரோ என்று தொடரை 1-0 என்று பதிலடி கொடுத்தார்.
இதைக் கண்ட இங்கிலாந்து ரசிகர்கள் எதுவும் பேசமுடியாமல் அப்படியே உட்கார்ந்தனர்.
இந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.