வெற்றியை நோக்கி இங்கிலாந்து! கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்ட சிராஜ்: வைரலாகும் வீடியோ
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், கையில் வந்து விழுந்த கேட்சை மொகமது சிராஜ் கோட்டை விட்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாளான இன்று இங்கிலாந்து அணி சற்று முன் வரை 2 விக்கெட் இழப்பிற்கு 131 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
இன்னும் கைவசம் 8 விக்கெட் உள்ளதால், இங்கிலாந்து இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Drop the catch, Drop the Match simple
— Gautam Gada (@GautamGada) September 6, 2021
India vs England
Virat Kohli vs Joe Root
GO GO GO
Retweet#ViratKohli #JoeRoot #INDvENG #IndvsEng #ENGvIND #ENGvsIND pic.twitter.com/akL1mm0coT
இங்கிலாந்து அணி வெற்றி பெற 63 ஓவரில் 237 ஓட்டங்கள் மட்டுமே தேவை. எனவே இந்திய அணி விக்கெட் எடுத்தால் மட்டுமே போட்டியை டிராவாது செய்ய முடியும்.
ஆனால், ரவீந்திர ஜடேஜா வீசிய ஓவரின் போது, துவக்க வீரர் Haseeb Hameed கொடுத்த கேட்சை, மொகமது சிராஜ் கோட்டை விட்டார். இதனால் ரவீந்திர ஜடேஜா, கோஹ்லி உள்ளிட்டோர் கோபத்தை வெளிப்படுத்தினர்.
Haseeb Hameed தற்போது வரை 62 ஓட்டங்கள் எடுத்து களத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.