இலங்கை அணியை நொறுக்கிய முகமது சிராஜ் ஐசிசி தரவரிசையில் முதலிடம்!
ஒருநாள் கிரிக்கெட் பந்துவீச்சாளர்களுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் முதலிடம் பிடித்துள்ளார்.
முகமது சிராஜ்
ஐசிசி தரவரிசைப் பட்டியலில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஒருநாள் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முகமது சிராஜ் முதலிடம் பிடித்துள்ளார்.
Twitter (ICC)
ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக மிரட்டலாக பந்துவீசிய சிராஜ், 21 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்கள் வீழ்த்தினார்.
மேலும் தொடர் முழுவதும் சிறப்பாக பந்துவீசிய அவர் 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அவுஸ்திரேலியாவின் ஹேசல்வுட்டை பின்னுக்கு தள்ளி சிராஜ் முதலிடம் பிடித்துள்ளார்.
Twitter (ICC)
பந்துவீச்சாளர்கள் சரிவு
டாப் 10 வீரர்களை சிராஜை தவிர்த்து நியூசிலாந்தின் மேட் ஹென்றி மட்டுமே ஒரு இடம் முன்னேறியுள்ளார்.
ஏனைய வீரர்களில் முஜீப் உர் ரஹ்மான், ரஷீத் கான் மற்றும் ஷஹீன் அப்ரிடி தவிர அனைவரும் சரிவை சந்தித்துள்ளனர்.
Twitter (ICC)
ஒருநாள் பந்துவீச்சு தரவரிசைப்பட்டியல்
- முகமது சிராஜ் (இந்தியா) - 694 புள்ளிகள்
- ஜோஷ் ஹேசல்வுட் (அவுஸ்திரேலியா) - 678 புள்ளிகள்
- ட்ரெண்ட் போல்ட் (நியூசிலாந்து) - 677 புள்ளிகள்
- முஜீப் உர் ரஹ்மான் (ஆப்கானிஸ்தான்) - 657 புள்ளிகள்
- ரஷீத் கான் (ஆப்கானிஸ்தான்) - 655 புள்ளிகள்
- மிட்செல் ஸ்டார்க் (அவுஸ்திரேலியா) - 652 புள்ளிகள்
- மேட் ஹென்றி (நியூசிலாந்து) - 645 புள்ளிகள்
- ஆடம் ஜம்பா (அவுஸ்திரேலியா) - 642 புள்ளிகள்
- குல்தீப் யாதவ் (இந்தியா) - 638 புள்ளிகள்
- ஷஹீன் அப்ரிடி (பாகிஸ்தான்) - 632 புள்ளிகள்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |