உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்விக்கு பின் கடுமையாக விமர்சிக்கப்படும் கோஹ்லி! அவருக்கு ஆதரவாக பேசி பதிலடி தந்த பிரபலம்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியை தொடர்ந்து பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில் அவருக்கு ஆதரவாக முன்னாள் வீரர் மொஹிந்தர் அமர்நாத் குரல் கொடுத்துள்ளார்.
இங்கிலாந்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நியூஸிலாந்து அணியிடம் இந்தியா தோல்வியடைந்தது.
அதனால் இப்போட்டியில் விளையாடிய இந்திய வீரர்களின் ஆட்டம் கடுமையான விமர்சனத்துகுள்ளாகி வருகிறது.
குறிப்பாக கேப்டன் விராட் கோஹ்லியை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் கோஹ்லியிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட வேண்டும் எனவும் பலரும் கூறி வருகின்றனர். சில முன்னாள் வீரர்கள் கூட கோஹ்லியை கடுமையாக விமர்சித்தனர்.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் மொஹிந்தர் அமர்நாத் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
அதில், கோஹ்லி மிகச்சிறந்த வீரர், நல்ல கேப்டன். நாம் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றால் உணர்ச்சிவசப்படக்கூடாது.
உண்மையிலேயே விராட் கோஹ்லி தனது வேலையை சரியாக செய்துள்ளார். நாளுக்கு நாள் ஒரு கேப்டனாக அவரது விளையாட்டை மேம்படுத்திக் கொண்டே வருகிறார்.
இதுபோன்ற வீரர்கள் ஒரு தலைமுறைக்கு ஒருவர்தான் உருவாகின்றனர் என கோஹ்லி மீதான விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்..