CSK அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகும் மோஹித் சர்மா
mohit sharma set to join csk bowling coach: CSK அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் வீரர் மோஹித் சர்மா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
CSKவின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோஹித் சர்மா
2009 ஐபிஎல் தொடர் முதல் சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஸ்டீபன் பிளெமிங் ஓய்வு பெற்ற நிலையில், அந்த பதவிக்கு ஜாகீர் கான் நியமிக்கபட்டுள்ளார்.
இந்நிலையில், சிஎஸ்கே அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக மோஹித் சர்மா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது எரிக் சிம்மன்ஸ் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.
38 வயதான மோஹித் சர்மா, இந்திய தேசிய அணிக்காக 2013 - 2015 காலகட்டத்தில் 26 ODI போட்டிகளிலும், 8 T20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார் .

ஐபிஎல் தொடரில், 2013 -2015 காலகட்டத்தில் சிஎஸ்கே அணிக்காக 48 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார்.
2014 ஐபிஎல் தொடரில் 24 விக்கெட்கள் கைப்பற்றி, அதிக விக்கெட்களை வீழ்த்துபவருக்கான ஊதா நிற தொப்பியை வென்றார்.