எல்லா காலத்திலும் சிறந்த வீரர் நீங்கள்! ஜாம்பவானுக்கு பிரியாவிடை கொடுத்த பாகிஸ்தான் வீரர்
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஹசிம் ஆம்லாவுக்கு பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் பிரியாவிடை அளித்து ட்வீட் செய்துள்ளார்.
ஹசிம் ஆம்லா ஓய்வு
கிரேம் ஸ்மித், ஜாக் காலீஸ் ஆகியோருக்கு பிருகு ஹசிம் ஆம்லா தென் ஆப்பிரிக்க அணியின் ஜாம்பவான் வீரராக விளங்கியவர்.
39 வயதாகும் ஆம்லா அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் 124 டெஸ்ட் போட்டிகளில் 9282 ஓட்டங்களும், 181 ஒருநாள் போட்டிகளில் 8113 ஓட்டங்களும் எடுத்தவர் ஆவார். ஆம்லாவின் ஓய்வு அறிவிப்பிற்கு பின் பல வீரர்களும் அவருக்கு பிரியாவிடை அளித்தனர்.
ரிஸ்வானின் ட்வீட்
அந்த வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானும் அவரை பாராட்டி வாழ்த்து கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், 'ஹசிம் ஆம்லா பாய் - எல்லா காலத்திலும் சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர் நீங்கள். உங்கள் இரண்டாவது இன்னிங்ஸ் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
நீங்கள் உங்கள் நாட்டிற்கு ஒரு சிறந்த தூதராக இருந்தீர்கள், மேலும் வரும் தலைமுறைகளுக்கு மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஒரு உண்மையான முன்மாதிரியாக இருந்தீர்கள்' என தெரிவித்துள்ளார்.
Hashim Amla bhai - one of the greatest batsmen of all time. Wish you the best for your second innings @amlahash. You have been a great emissary for your country and a true role model for generations to come, both in and out of the ground. ? pic.twitter.com/n5KPIWQRwQ
— Muhammad Rizwan (@iMRizwanPak) January 20, 2023