சிரியா, துருக்கியில் இருந்து பயங்கரமான செய்திகள் வெளிவருகின்றன..வேதனை தெரிவித்த கால்பந்து பிரபலம்
சிரியா மற்றும் துருக்கியில் ஏற்பட்டுள்ள பயங்கர நிலநடுக்கங்கள் குறித்து எகிப்து கால்பந்து வீரர் முகமது சாலா வேதனை தெரிவித்துள்ளார்.
2,600 பேர் பலி
மூன்று பெரிய நிலநடுக்கங்கள் துருக்கியை தாக்கியதில் இதுவரை 2,600க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இறப்புகள் மற்றும் பேரழிவுகள் அண்டை நாடான சிரியாவிலும் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு 7.8-யில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், சில மணிநேரங்களில் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
@Elifaysenurbay / Associated Press
@AP
முகமது சாலா ட்வீட்
இந்த நிலையில் எகிப்தின் பிரபல கால்பந்து வீரர் முகமது சாலா நிலநடுக்க பாதிப்புகள் குறித்து வேதனை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
'சிரியா மற்றும் துருக்கியில் இருந்து பயங்கரமான செய்திகள் வெளிவருகின்றன. உயிரிழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் பூரண குணமடைய வாழ்த்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.
Terrible news coming out of Syria and Turkey. My condolences for the lives lost and I wish all those injured a full recovery.
— Mohamed Salah (@MoSalah) February 6, 2023
@Niall Carson/PA