சொந்த மகனைக் கொல்ல வாடகை கொலையாளியை நாடிய தாய்: ஒற்றைத் தவறால் அம்பலமான சதி
அமெரிக்காவில் 3 வயதேயான சொந்த மகனைக் கொல்ல வாடகைக் கொலையாளியை நாடிய இளம் தாயார் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
வாடகைக் கொலையாளியை நாடிய
தொடர்புடைய சம்பவம் குறித்து பொலிசார் தெரிவிக்கையில், அந்த 18 வயது தாயார் தமது மகனைக் கொல்ல வாடகைக் கொலையாளியை நாடிய இணைய பக்கமானது போலியானது எனவும், கிண்டலுக்காக அப்படியான இணைய பக்கம் ஒன்று செயல்பட்டு வருந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
Credit: CBS
அந்த இணைய பக்கத்தில் தமது மகனின் புகைப்படத்தையும் கைமாறியதுடன், சிறுவன் எங்கெல்லாம் செல்ல வாய்ப்புள்ளது என்பதையும் விளக்கமாக தெரிவித்துள்ளார். ஆனால் அந்த இணைய பக்கத்தின் உரிமையாளர்கள், உடனடியாக இந்த தகவலை பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
3,000 டொலர் கட்டணம்
தகவலை அடுத்து துரிதமாக செயல்பட்ட பொலிசார், தொடர்புடைய பெண்ணின் விலாசத்தை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து, பொலிஸ் அதிகாரிகளில் ஒருவர் குறித்த இளம் தாயாரை தொடர்புகொண்டு, கொலை செய்ய தயார் எனவும், 3,000 டொலர் கட்டணமாக செலுத்தவும் கோரியுள்ளனர்.
தொடர்புடைய பெண் அதற்கு ஒப்புக்கொள்ள, அதிர்ந்து போன பொலிசார், உடனடியாக அவர் வீட்டுக்கு சென்று அவரை கைது செய்துள்ளனர். அவர் மீது கொலைக்கு கோரிக்கை விடுத்தது, சமூக ஊடகத்தை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
அத்துடன், தமது மகனை இனி நெருங்க கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளனர். இதனிடையே, சிறுவன் உறவினர்கள் வசம் பத்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |