பிரான்சுக்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய தாயும் மகனும்: கிடைத்த துயரச் செய்தி
பிரித்தானியர்களான ஒரு தாயும் மகனும் பிரான்சுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், பனிச்சறுக்கு விளையாடும்போது பரிதாபமாக பலியானார்கள்.
பனிச்சறுக்கு விளையாடச் சென்ற பிரித்தானிய தாயும் மகனும்
இங்கிலாந்தின் மான்செஸ்டரைச் சேர்ந்த கேட் (Kate Vokes, 54) மற்றும் அவரது மகனான ஆர்ச்சி (Archie Vokes, 22) ஆகிய இருவரும், பிரான்சுக்கு சுற்றுலா சென்றுள்ளார்கள்.
கடந்த வியாழனன்று பனிச்சறுக்கு விளையாடச் சென்ற தாயும் மகனும் மாயமான நிலையில், இரண்டு ஹெலிகொப்டர்களுடன் மீட்புக் குழுவினர் 20 பேரும் அவர்களை தேடிச் சென்றுள்ளார்கள்.
FAMILY HANDOUT
ஐந்து மணி நேர தேடலுக்குப் பின்பு, கேட் மற்றும் ஆர்ச்சியின் உயிரற்ற உடல்களைத்தான் அவர்களால் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.
பனிப்பாறைச் சரிவில் சிக்கிய துயரம்
கேட்டும் ஆர்ச்சியும் பனிச்சறுக்கு விளையாடும்போது, உள்ளூர் நேரப்படி மதியம் 3.30 மணியளவில் பனிப்பாறைச் சரிவு ஏற்பட்டுள்ளது.
சுமார் 7,546 அடி உயரத்திலிருந்து துவங்கிய பனிப்பாறைச் சரிவில் சிக்கி தாயும் மகனும் உயிரிழந்துள்ளார்கள்.
Credit: Family picture/PA Images
கேட், பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் பணியாற்றியதுடன், தங்கள் குடும்ப நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றிவந்துள்ள நிலையில், கேட் மற்றும் ஆர்ச்சியின் துயர முடிவு, மான்செஸ்டருக்கு பெரும் இழப்பு என்று கூறி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார் நகர கவுன்சில் தலைவரான Bev Craig என்பவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |