அமெரிக்காவின் பயங்கரமான சாலையில் பயணித்துக்கொண்டிருந்த நபர்: கண்ணில் பட்ட அமானுஷ்ய காட்சி...
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பயங்கரமான ஒரு சாலை உள்ளதாம்.
அந்த சாலையில் பயணிப்போர், குறிப்பாக இரவு நேரங்களில் தனியாக பயணிப்போர், அமானுஷ்ய காட்சி ஒன்றைக் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
கமெராவில் சிக்கிய காட்சி
அரிசோனாவிலுள்ள Route 87 என்னும் சாலையில் பயணித்துக்கொண்டிருந்த William Church என்பவர் கண்ணில் ஒரு காட்சி பட்டுள்ளது.
சாலையோரமாக ஆவி போன்ற ஒரு உருவம் நிற்பதை கவனித்துள்ளார் அவர்.
வீட்டுக்குச் சென்று தான் பார்த்ததை உறுதி செய்துகொள்வதற்காக தன் காரிலுள்ள டேஷ்கேம் கமெராவில் பதிவான காட்சிகளை போட்டுப் பார்த்துள்ளார் அவர்.
அப்போது சாலையோரமாக தெரிந்த அந்த உருவம் கமெராவிலும் பதிவாகியுள்ளதைக் கண்டுள்ளார் அவர்.
அவர் இந்த வீடியோவை சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட, அதைப் பார்த்த சிலர் தாங்களும் அந்த சாலையில் இதுபோன்ற திகில் காட்சிகளைக் கண்டுள்ளதை உறுதி செய்துள்ளார்கள்.
அவர்களில் ஒருவர், தான் கண்ட உருவத்தின் மீது ஒளியைப் பாய்ச்சியும், அந்த உருவத்தின் மீது ஒளி படாமல் அது கருப்பாகவே இருந்ததாக தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.