பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் நேரலையில் செய்த ஒரு செயல்: எழுந்துள்ள கடும் விமர்சனம்
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின்போது, நேரலையில் செய்த ஒரு செயல் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
அப்படி என்ன செய்தார் மேக்ரான்?
பிரான்சில் ஓய்வு பெறும் வயதை 62இலிருந்து 64ஆக உயர்த்தும் மேக்ரானின் திட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.
நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் என மக்கள் சாலைகளில் குவிய, சில இடங்களில் வன்முறை வெடிக்க, பிரித்தானிய மன்னரின் அரசு முறைப்பயணமே ரத்தாகும் நிலை உருவாகியுள்ளது.
Credit: Getty
இப்படிப்பட்ட ஒரு சூழலில், தனது ஓய்வூதிய திட்டம் குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் மேக்ரான்.
பேசிக்கொண்டிருக்கும்போதே, அவர் தான் கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தை மெதுவாக கழற்றி அருகிலிருந்த நாற்காலியில் வைத்தார்.
அந்த விடயம்தான், எதிர்பாராத விதமாக, இப்போது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
Credit: TF1, France 2
என்ன சர்ச்சை?
அதாவது, மேக்ரான் விலையுயர்ந்த ஒரு கைக்கடிகாரத்தை அணிந்திருந்ததாகவும், அது வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக, அதை நைஸாக கழற்றிவைத்துவிட்டதாகவும் அவர் மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, பணக்காரர்களின் ஜனாதிபதி என மேக்ரான் விமர்சிக்கப்படுவதுண்டு.
இந்நிலையில், அவர் கைக்கடிகாரத்தை கழற்றியதையும் அதே கோணத்திலேயே விமர்சித்துள்ளார்கள் விமர்சகர்கள்.
Credit: TF1, France 2
குறைந்த வருவானமே கொண்ட பணியாளர்களை கோபப்படுத்தியுள்ள அவரது மறுசீரமைப்பு குறித்து பேசும்போது மேக்ரானுக்கு இவ்வளவு விலையுயர்ந்த கைக்கடிகாரம் தேவையா என சிலர் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
அதை அவர் கழற்றிவைத்ததையும் விமர்சித்துள்ளார்கள்.
Credit: AP
உண்மையில் நடந்தது என்ன?
உண்மையில், வெளியாகியுள்ள வீடியோவைப் பார்க்கும்போது, உணர்ச்சிவசப்பட்டு மேக்ரான் பேசும்போது அவரது கைக்கடிகாரம் மேசையில் இடிப்பதை, அது எழுப்பும் சத்தத்திலிருந்து கவனிக்க முடியும்.
ஜனாதிபதி மாளிகையும் அதைத்தான் கூறியுள்ளது. அவரது கைக்கடிகாரம் மேசையில் இடித்ததால்தான் அதை அவர் கழற்றிவைத்தார் என ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது. ஆனால், அவர் அதை மேசைக்குக் கீழே வைத்து கழற்றிவைத்தது விமர்சனத்துக்கு வழிவகுத்துவிட்டது.
Credit: AP
இன்னொருபக்கம், சமூக ஊடகங்களில் அந்த கடிகாரத்தின் விலை 70,000 பவுண்டுகள் என்னும் செய்தியும் பரவியது. ஆனால், உண்மையில் அதன் விலை 2,110 பவுண்டுகள் என தெரியவந்துள்ளது.
மேக்ரான், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அந்த கைக்கடிகாரத்தைத்தான் அணிந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Credit: TF1, France 2
Credit: Alamy