முத்தக்காட்சிக்குப் பின் மாயமான பிரித்தானிய சுகாதாரச் செயலரை துரத்திய அழகிய இளம்பெண்கள்: கமெராவில் சிக்கிய காட்சி
பிரித்தானிய சுகாதாரச் செயலரும், திருமணமாகி மூன்று பிள்ளைகளுக்குத் தாயாகிய அவரது உதவியாளரும் திருட்டுத்தனமாக முத்தமிட்டுக்கொள்ளும் காட்சி ஒன்று வெளியாகி, பிரித்தானிய நாடாளுமன்றத்தையே கலகலக்கச் செய்தது நினைவிருக்கலாம்.
பிரித்தானிய சுகாதாரச் செயலரான Matt Hancock (42)ம், அவரது உதவியாளரான Gina Coladangelo (43)ம், அலுவலகத்தில் முத்தமிட்டுக்கொள்ளும் காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து, இருவரும் தலைமறைவானார்கள்.
இந்நிலையில், தலையில் தொப்பியும், முகத்தில் மாஸ்குமாக, அரைக்கால்சட்டை அணிந்து ரயிலில் பயணித்த Hancock ஒரு கூட்டம் அழகிய இளம்பெண்களிடம் சிக்கினார்.
தங்களுக்குத் தெரிந்த ஒரு நபர் என்று தவறாக நினைத்து அந்த பெண்கள் Hancockஐ அணுக, பின்னர்தான் அவர்களுக்குத் தெரியவந்தது அது முன்னாள் சுகாதாரச் செயலர் என்று.
ஆனாலும், அந்த இளம்பெண்கள் Hancockஐ சுற்றி வளைத்துக்கொண்டார்கள். அவருடன் ஜாலியாக பேசிக்கொண்டும், அவரது தொப்பியைப் பிடுங்கி தங்கள் தலையில் அணிந்துகொண்டும் அந்த பெண்கள் அவரைச் சுற்றி நடனமாடிய காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த பெண்களில் ஒருவர் சமூக ஊடகம் ஒன்றில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். எங்களுக்கு Hancockஐ ரொம்ப பிடித்துவிட்டது, நாங்கள் இறங்கவேண்டிய இடம் வந்தும், எங்களுக்கு ரயிலிலிருந்து இறங்க மனமே இல்லை என்று கூறியுள்ளார்.
அத்துடன், ரயிலிலிருந்து இறங்கும்போது முன்பு அவரது தொப்பியை கழற்றிய அதே இளம்பெண், மீண்டும் அவரது தொப்பியை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார். தொப்பியைக் கொடுங்கள் என்று Hancock கத்தினாலும் அந்த பெண் தொப்பியுடன் ஓடிவிட்டார்.
பிறகு, என்ஜாய் பண்ணுங்கள் என்று கூறி அந்த பெண்களை மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்துள்ளார் Hancock.