பிரித்தானிய மகாராணியாருக்கு புதிதாக தலைவலியை ஏற்படுத்தியுள்ள விடயம்: இளவரசர் மீது பாலியல் புகார்
பிரித்தானிய மகாராணியாரின் மகனான இளவரசர் ஆண்ட்ரூ மீது அமெரிக்கப் பெண் ஒருவர் பாலியல் வழக்கு தொடர்ந்துள்ள விடயம், மகாராணியாருக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ குடும்பம் பல ஆண்டுகளாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது.
1996ஆம் ஆண்டு, இளவரசர் சார்லஸ் டயானா விவாகரத்து ராஜ குடும்பத்தை கலகலத்துபோகச் செய்ததை உலகமே பார்த்தது.
அடுத்து, உலகமே பார்க்கும் வண்ணம் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் ராஜ குடும்பத்தின் மீது சேற்றை வாரி இறைத்தார்கள்.
இப்போது அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட ஒரு பிரச்சினை மீண்டும் மகாராணியாருக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
ஆம், அமெரிக்க பெண்ணான விர்ஜினியா ராபர்ட்ஸ் என்பவர் பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் தெரிவித்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
. ஏராளமான இளம்பெண்களையும் சிறுமிகளையும் சீரழித்து, பல உலக பிரபலங்களுக்கும் விருந்தாக்கியவர் அமெரிக்க கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவர். அப்படி அவர் கொடுத்த விருந்து ஒன்றில் பங்கேற்ற இளவரசர் ஆண்ட்ரூ, ஜெஃப்ரியின் பாலியல் அடிமையாக இருந்த தன்னுடன் மூன்று முறை பாலுறவு வைத்துக்கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார் விர்ஜினியா.
அப்போது விர்ஜினியா மைனராக இருந்ததால், ஆண்ட்ரூ மீது குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பிலான வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வரிசையாக பிரச்சினைகளையும், கணவரின் இழப்பையும் சந்தித்து சோர்ந்து போயிருந்த மகாராணியார் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்குள், இளவரசர் ஆண்ட்ரூ வழக்கு நீதிமன்றம் சென்றுள்ளதால், மகாராணியாருக்கு மீண்டும் ஒரு தலைவலி உருவாகியுள்ளது.