மோமோஸ் விற்றே பல நூறு கோடிகள் சம்பாதிக்கும் நபர்: அவரது சொத்து மதிப்பு
இந்தியாவின் கொல்கத்தா நகரத்தை சேர்ந்த நபர் ஒருவர் மோமோஸ் தின்பண்டம் விற்றே ரூ.2100 கோடி மதிப்பிலான நிறுவனத்தை உறுவாக்கியுள்ளார்.
நாளுக்கு 6 லட்சம் மோமோஸ்
கொல்கத்தாவை சேர்ந்தவர் சாகர் தர்யாணி. இவரும் இவரது நண்பர் பினோத் குமார் என்பவரும் இணைந்து உருவாக்கிய நிறுவனம் தான் வாவ் மோமோ. கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்தியாவின் மிகவும் பிரபலமான சிற்றுண்டியாக மோமோஸ் உருவெடுத்துள்ளது.
மோமோஸ் தின்பண்டம் மீதான ஆசையை கொல்கத்தாவை சேர்ந்த சாகர் தர்யாணி என்பவர் ரூ.2100 கோடி மதிப்பிலான நிறுவனமாக உருவாக்கியுள்ளார். இவரது வாவ் மோமோ நிறுவனம் நாளுக்கு 6 லட்சம் எண்ணிக்கையிலான மோமோஸ்களை விற்பனை செய்து வருகிறது.
கொல்கத்தாவின் செயின்ட் சேவியர் கல்லூரியில் பட்டம் பெற்ற சாகர் தர்யாணியை அவரது பெற்றோர் மேற்படிப்புக்கு கட்டாயப்படுத்தியதுடன், மோமோஸ் விற்கும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் பெற்றோர்களை சமாளித்து 2008ல் நண்பர் பினோத் குமாருடன் இணைந்து தங்களின் சேமிப்பான ரூ.30,000 தொகையில் ஒரு சிறிய மோமோஸ் கடையை துவங்கியுள்ளனர்.
ஆண்டுக்கு ரூ.400 கோடி வருவாய்
தொடக்கத்தில் அவர்களிடம் 1 டேபிள் மற்றும் இரண்டு பகுதி நேர சமையல்காரர்கள் மட்டுமே இருந்தனர். முதல் இரண்டு ஆண்டுகள் கடையை முன்னெடுத்து செல்ல முதலீடுக்காக கடுமையாக போராடியுள்ளனர்.
மட்டுமின்றி, மோமோஸ் சிற்றுண்டியில் பல வகைகளை முயற்சி செய்தனர். அது அவர்களுக்கு பெரும் வெற்றியை ஈட்டித்தந்தது. கொல்கத்தா நகரில் பல கடைகளை திறக்கவும் வாய்ப்பாக அமைந்தது.
மட்டுமின்றி வேறு நபர்களுக்கு உரிமையை வழங்கி தங்கள் நிறுவனம் சார்பில் கடை தொடங்கவும் ஊக்குவித்தனர். தற்போது இந்தியா முழுக்க வாவ் மோமோஸ் பெயரில் 800 கடைகள் செயல்பட்டு வருகிறது.
வாவ் மோமோஸ் நிறுவனத்தின் நிகர மதிப்பு ரூ.2,130 கோடி என்றே கூறப்படுகிறது. வெறும் ரூ.30,000 முதலீட்டில் துவங்கிய வாவ் மோமோஸ் கடை தற்போது ஆண்டுக்கு ரூ.400 கோடி வரையில் வருவாய் ஈட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |