படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி கல்வி கற்க ஆரம்பித்த மோனாலிசா.., கும்பமேளாவால் கிடைத்த வாய்ப்பு
மகா கும்பமேளா மூலம் வைரலான மோனாலிசா என்ற பெண், தனது முதல் படத்திற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளார்.
கல்வி கற்கும் மோனாலிசா
மகா கும்பமேளாவில் 16 வயதுடைய பாசி மாலை விற்பனை செய்யும் மோனாலிசா போஸ்லே என்ற பெண் சமூக வலைதளங்களில் வைரலானார்.
திரை நடிகைகளை போன்று இல்லாமல் எதார்த்தமான அழகுடன், மிளிரும் மாநிறத்தில் தனித்துவமான கண்களுடன் பாசி மாலைகள் விற்கும் இவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வந்தது.
இதையடுத்து, இயக்குநர் சனோஜ் மிஸ்ரா, மணிப்பூரில் நடந்த ஒரு நிஜ வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட டைரி ஆஃப் மணிப்பூர் திரைப்படத்தில் மோனாலிசாவை ஒப்பந்தம் செய்தார்.
இதில், மூத்த நடிகர் அனுபம் கெர் சித்தரித்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியின் மகளாக மோனாலிசா ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், தனது முதல் கதாபாத்திரத்திற்குத் தயாராகி வரும் மோனாலிசாவை, படக்குழு மும்பைக்கு அழைத்து வந்துள்ளது.
அங்கு அவருக்கு பயிற்சி மற்றும் கல்வி அளித்து வருகிறது. மும்பையில் திரைப்பட தயாரிப்பாளர் சனோஜ் மிஸ்ராவின் வழிகாட்டுதலின் கீழ் நடிகராக தனது முதல் அடிகளை மோனாலிசா எடுத்து வருகிறார்.
அவர் கற்பிப்பது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது மோனாலிசாவின் கற்கும் ஆர்வத்தைக் காட்டுகிறது.
இந்த வீடியோவில், மோனாலிசா ஒரு வசதியான அறையில் அமர்ந்து, சனோஜ் மிஸ்ராவின் வழிகாட்டுதலுடன், எழுத்துக்களைக் கற்றுக்கொள்வதைக் காணலாம்.
முன்னதாக, திரைப்படத் தயாரிப்பாளர் சனோஜ் மிஸ்ரா மோனாலிசாவின் குடும்பத்தினருடன் சந்தித்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
அப்போது பேசிய மிஸ்ரா, "மோனாலிசா கடின உழைப்பில் ஈடுபட ஆர்வமாக உள்ளார், மேலும் அவரை வெற்றிக்கு அழைத்துச் செல்வது எங்கள் பொறுப்பு" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |