சட்ட வல்லுநரை பணிக்கு அமர்த்திய மன்னர் சார்லஸ்: குடும்ப உறுப்பினர்களுக்கு காத்திருக்கும் சவால்
மதி நுட்பம் மிகுந்த சொராப்ஜி மன்னருக்கு பக்கபலமாக இருந்து செயல்படுவார் என்றே தெரிவிக்கின்றனர்.
மன்னர் சார்லஸின் இந்த முடிவு சில வேளை குடும்ப உறுப்பினர்களுக்கு சவாலாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பிரித்தானிய ராஜகுடும்பத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்து பலரையும் விடுவிக்கும் பொருட்டு, சட்ட ஆலோசனைகள் பெற வல்லுநர் ஒருவரை பணிக்கு அமர்த்தியுள்ளார் மன்னர் சார்லஸ்.
லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் சட்ட விரிவுரையாளராக பணியாற்றிவரும் Dr John Sorabji என்பவரையே தமது புதிய குழுவில் சார்லஸ் மன்னர் உட்படுத்தியுள்ளார்.
செயின்ட் ஜான் சேம்பர்ஸ்ல் முன்பு பாரிஸ்டராக பணியாற்றியுள்ள சொராப்ஜி மன்னரின் தனிப்பட்ட செயலாளரான சர் கிளைவ் ஆல்டர்டனுக்கு உதவும் வகையில் பணியாற்றுவார் என கூறப்படுகிறது.
மதி நுட்பம் மிகுந்த சொராப்ஜி மன்னருக்கு பக்கபலமாக இருந்து செயல்படுவார் என்றே தெரிவிக்கின்றனர். மேலும், நீண்ட காலமாக தனக்கான ஒரு சிறு வட்டத்தை உருவாக்கி, பொதுமக்களுக்கு அதிக சேவை செய்ய வேண்டும் என்ற கொள்கையில் மன்னர் சார்லஸ் தயாராகி வந்ததாகவும்,
தற்போது அதற்கான வாய்ப்பு அமைந்துள்ளதாகவும், இதனாலையே சட்ட ஆலோசனை பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். மன்னர் சார்லஸின் இந்த முடிவு சில வேளை குடும்ப உறுப்பினர்களுக்கு சவாலாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
@getty
மட்டுமின்றி, மரபுகள் பல மீறப்படலாம் எனவும், அதன் முதற்படியாக மறைந்த ராணியாருக்கு உதவியாக இருந்த, அரண்மனைக்கும் ராணியாருக்கும் இடையே கண்ணும் காதுமாக செயல்பட்ட 9 பெண்களில் அனைவரும் வேலையை இழக்க உள்ளனர்.
இதில் பலரும் 80 வயதை கடந்தவர்கள் என்றே கூறப்படுகிறது. கமிலா ராணியாக முடிசூட்டவிருக்கும் நிலையில், அவருக்கு ஏற்கனவே உதவி வரும் இரு பெண்களை மட்டுமே தமது குழுவில் உட்படுத்த இருக்கிறார்.
அத்துடன், எலிசபெத் ராணியாருக்கு உதவி வந்த அனைவரும் பணியில் இருந்து நீக்கப்பட உள்ளனர். மேலும், அரண்மனையின் பல பொறுப்புகள் இனி நிரப்ப வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.