மன்னராட்சி முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும்: பிரித்தானிய ஆட்சியின் கீழிருக்கும் நாடுகளில் பரவும் கருத்து
பிரித்தானிய மகாராணியார் மீது அன்பும் மரியாதையும் பல நாட்டு மக்களுக்கு உள்ளது உண்மைதான்.
ஆனால், பிரித்தானிய மகாராணியாரின் மறைவு, முந்தைய காலனி ஆதிக்கக் காலகட்டத்தின் நினைவுகளை மீண்டும் கொண்டுவந்துள்ளதும் உண்மை.
பிரித்தானிய மகாராணியாரின் மறைவு, பிரித்தானிய ஆட்சியின் கீழிருக்கும் பல நாடுகளில், மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டுவரக்கூடும் என்ற கருத்து உருவாகத் துவங்கியுள்ளது.
பிரித்தானிய மகாராணியார் மீது அன்பும் மரியாதையும் கொண்டவர்கள் உலக முழுவதும் இருக்கும் நிலையில், தற்போது அவரது மறைவு அவருக்கு முந்தைய காலனி ஆதிக்கக் காலகட்டத்தின் நினைவுகளை மீண்டும் கொண்டுவந்துள்ளது.
பிரித்தானியர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளை ஆண்ட நிலையில், இரண்டு வகையில் அவர்கள் மற்ற நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தினார்கள்.
Photographer: Wiktor Szymanowicz/Anadolu Agency/Getty Images
சில நாடுகளைக் கைப்பற்றி அங்கிருந்த பூர்வக்குடியினரை ஓரங்கட்டிவிட்டு அங்கு தாங்கள் வாழத்துவங்கினார்கள். அமெரிக்கா போன்ற நாடுகள் அதற்கு உதாரணம்.
சில நாடுகளில் தங்கள் பிரதிநிதிகளை ஆட்சி செய்ய அமர்த்திவிட்டு, அங்கிருந்த செல்வத்தையும், மக்களையும், பிரித்தானியாவை மேம்படுத்துவதற்கு பயன்படுத்திக்கொண்டார்கள். இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் அதற்கு உதாரணம்.
பின்னர் 65 நாடுகள் பிரித்தானியாவிடமிருந்து விடுதலை பெற்றாலும், இன்னமும் 14 நாடுகள் பிரித்தானிய ஆட்சியின் கீழ்தான் இருக்கின்றன.
இந்நிலையில், பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மறைவைத் தொடர்ந்து, அந்த நாடுகள் சிலவற்றிலும் மன்னராட்சி முடிவுக்கு வரவேண்டும் என்ற கருத்து உருவாகத் துவங்கியுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
குறிப்பாக கரீபியன் பகுதியில் இந்த கருத்து மேலோங்கத் துவங்கியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம், பார்படாஸ் தங்களுக்கு மன்னராட்சி வேண்டாம் என்று கூறி தன்னை குடியரசாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து, ஆன்டிகுவா மற்றும் பார்புடா என்னும் நாடு, மன்னர் சார்லஸ் தங்கள் நாட்டின் தலைவராக தொடரவேண்டுமா என்று முடிவு செய்வதற்காக வாக்கெடுப்பு நடத்த உள்ளது.
ஜமைக்கா போன்ற நாடுகளில் வாழும் இளைய தலைமுறையினர், தங்கள் நாட்டில், பிரித்தானிய மகாராணியாருக்கு அஞ்சலி செலுத்தப்படும் விடயத்தைக் கவனிக்கத் துவங்கியுள்ளார்கள். தங்கள் நாட்டுக்கும், முன்னர் காலனி ஆதிக்கம் செலுத்திய பிரித்தானியாவுக்கும் உள்ள தொடர்பைக் குறித்து மக்கள் சிந்திக்கத் துவங்கியுள்ளார்கள்.
Photographer: Randy Brooks/AFP/Getty Images
ஜமைக்கா நாட்டுக்கும் பிரித்தானிய மன்னர்தான் தலைவர் என்றாலும், ஜமைக்கா நாட்டினர் பிரித்தானியாவுக்குச் செல்ல விசா தேவை என்னும் விடயம் தற்போது பெரிய உறுத்தலாக முன்னே வந்து நிற்கிறது. அதாவது, தங்கள் நாட்டுக்கு பிரித்தானிய மகாராணியார் அல்லது மன்னர் தலைவராக இருந்தும், அதனால் தங்களுக்குப் பயனில்லை என்பது மக்களுக்குப் புரியத் துவங்கியுள்ளது.
ஏராளமான ஆப்பிரிக்கர்கள் கரீபியன் நாடுகளுக்கு அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டு கட்டாயப்பணிகளுக்கு உட்படுத்தப்பட்ட வரலாற்றை மக்கள் நினைவுகூரத் துவங்கியுள்ளார்கள்.
ஆக, இளவரசர் சார்லஸ் பிரித்தானிய மன்னராகியிருக்கும் நிலையில், பல நாடுகள் மன்னராட்சியின் கீழிருந்து விடுதலை கோரும் ஒரு நிலை விரைவில் உருவாகலாம்!