பிரித்தானியாவில் திங்கட்கிழமை முதல் முக்கிய கட்டுப்பாடு தளர்வு! வெளியான அதிகாரிப்பூர்வ அறிவிப்பு
பிரித்தானியாவில் இயல்பு நிலை திரும்பவதற்கான மிகப்பெரிய படியாக திங்கட்கிழமை முதல் முக்கிய கட்டுப்பாடு தளர்த்தப்படும் என நாட்டின் சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் கூறியதாவது, 2 டோஸ் தடுப்பூசி போடுவது நமக்கு பாதுகாப்பாக உள்ளது மற்றும் இழந்த சுதந்திரத்தை மீட்டெடுக்க உதவுகிறது.
திங்கட்கிழமை முதல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பிலிருந்த இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் அல்லது 18 வயதிற்கு உட்பட்டவர்கள் தனிமைப்படுத்த தேவையில்லை.
இது நாம் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான மிகப்பெரிய படியாக இருக்கும்.
அறிகுறிகளின்றி கொரோனா பாதிப்பு உள்ளவர்களை கண்டறிய மக்கள் வாரத்திற்கு இரண்டு முறை rapid lateral flow சோதனை செய்ய வேண்டும்.
சுகாதாரம் மற்றும் சமூகப் பராமரிப்பு ஊழியர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்திருந்தால், பணிக்கு திரும்புவதற்கு தொற்று பாதிப்பு இல்லை என்ற பிசிஆர் சோதனை முடிவை வழங்க வேண்டும்.
மேலும் முன்னெச்சரிக்கையாக 10 நாட்களுக்கு rapid lateral flow சோதனைகளை எடுக்க வேண்டும் என சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.