காற்றில் பறந்துவந்த பணம்... பணத்தை எடுக்க போட்டி போட்ட மக்கள்: பலியான ஒரு உயிர்
அமெரிக்க நகரமொன்றில், நெடுஞ்சாலை ஒன்றின் ஓரமாக பறந்துவந்த பணத்தை எடுக்க மக்கள் போட்டி போட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
அப்போது பணத்தை எடுப்பதற்காக காரிலிருந்து இறங்கிய ஒருவர் மீது கார் ஒன்று மோத, அவர் பரிதாபமாக பலியானார்.
காற்றில் பறந்துவந்த பணம்...

Image: NBC10
புதன்கிழமை அதிகாலை, அமெரிக்காவிலுள்ள Rhode Island என்னுமிடத்தில் சாலையோரமாக காற்றில் பணம் பறந்துவந்ததைக் கண்ட மக்கள் அந்த பணத்தை எடுக்க போட்டிபோட, பொலிசாரும் அவற்றைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.
அப்போது காரில் சென்றுகொண்டிருந்த கெவின் (Kevin Elliot McCourt) என்பவர், தனது காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு, சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.
 
Image: NBC10  
அவர், சாலையின் மறுபக்கம் கிடந்த பணத்தை எடுப்பதற்காக சென்றதாக கருதப்படுகிறது. ஆனால், சாலையைக் கடக்க முயன்ற கெவின்மீது, நெடுஞ்சாலையில் வேகமாக வந்துகொண்டிருந்த ஒரு கார் மோதியுள்ளது.
கார் மோதியதில் கெவின் உயிரிழந்துவிட்டார். அவர் மீது மோதிய காரின் சாரதியிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Image: NBC10
அதே நேரத்தில், யார் இப்படி சாலையில் பணத்தைப் பறக்கவிட்டது என்பதும் தெரியவரவில்லை.

Image: NBC10
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        