பாஸ்போர்ட்டை பெற்றுக்கொண்டு கனடாவுக்கு அனுப்புவதாக மோசடி! சிக்கிய பெண்
கனடாவில் வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டதாக பெண்ணொருவரை தமிழக பொலிசார் கைது செய்தனர்.
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் ஆரோக்கியம். இவர், சென்னை பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், கனடாவில் குடியுரிமையுடன் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடி நடைபெற்றுள்ளது.
பாஸ்போர்ட்டுகளை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய அந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். கனடாவில் வேலை மற்றும் குடியுரிமை பெற்றுத்தருவதாக ஆசை வார்த்தை கூறி பலரிடம் ரூ.52 லட்சத்துக்கும் மேல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்த வழக்கில் மயிலாடுதுறையை சேர்ந்த நடேஷ்வரி (45) என்ற பெண் முக்கிய ஏஜெண்டாக செயல்பட்டு வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பொலிசார் அவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து போலி ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட் கைப்பற்றப்பட்டன.